Share via:
சென்னை மாநில கல்லூரியில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் 110வது விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் முன்னாள் இந்திய பிரதமர் வி.பி.சிங் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், சென்னையில் சிலை அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சம் மதிப்பில் வடிவமைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் முழு உருவ சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின இன்று திறந்து வைத்தார். இவ்விழாவிற்கு உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மேலும் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் மனைவி சீத்தாகுமரி, மகன்கள் அஜய்சிங், அபய்சிங், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சட்டமன்றத்தில் 110வது விதியின் கீழ் அறிவித்தபடியே முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை வடிவமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டதை தி.மு.க.வினர் தங்கள் வலைபக்கத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.