Share via:
ஸ்டார்ட் அப் தமிழா தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று தொடங்கி வைத்தார்.
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ‘ஸ்டார்ட் அப் தமிழா’’ என்ற தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியை அறிமுகம் செய்து வைத்து உரை நிகழ்த்தினார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள் 50 சதவீத பங்களிப்பை வழங்கி வரும் நிலையில் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கி அதிக வேலை வாய்ப்பை ஏற்படுத்துவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
அப்படிப்பட்ட எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அடித்தளமாக விளங்கி வருவதால், அதற்கான தகுந்த சூழலை அமைத்து தொழில் துறையில் தமிழகத்தை சிறந்த மாநிலமாக உருவாக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்டார்ட் அப் இயக்கத்திற்கு புத்துயிர் அளித்துள்ளார். அதன்படி ஸ்டார்ட் அப்&டி.என் இயக்கத்திற்கென முதன்மை செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு அவர்கள் தலைமையில் 40க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஸ்டார்ட் அப் டிஎன் இயக்கத்தில் பணியாற்ற உள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் வரை 2,300 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 7,400க் மேல் அதிகரித்து சென்னையில் கடந்த ஆண்டு 1.5 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடுகளை ஈர்த்துள்ளது.
மேலும் அதிகப்படியான ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஈர்க்கும் முயற்சியில் ‘ஸ்டார்ட் அப் தமிழா’ என்ற புதிய தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ ஒலிபரப்பாக உள்ளது. இது சீசன் 1,2,3 என 3 கட்டங்களாக ஒவ்வொரு சீசனுக்கும் 12 எபிசோடுகள் என மொத்தம் 36 எபிசோடுகள் ஒலிபரப்பப்பட உள்ளன.
இதன் அறிமுக நிகழ்ச்சியில் தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் செயலாளர் அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ்., தமிழ்நாடு அரசு தொழில்துறை செயலாளர் அருண் ராய் ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஸ்டார்ட் அப் தமிழா ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க விருப்பமுள்ள தொழில் முனைவோர் ஷ்ஷ்ஷ்/stணீக்ஷீtuஜீtலீணீனீவீக்ஷ்லீணீ.tஸ் என்ற இணையதளத்திற்கு சென்று தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். அப்படி விண்ணப்பிக்கும் ஸ்டார்ப் அப் நிறுவனங்கள் 5 கட்ட பரிசீலனைக்கு நடைமுறைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
அதன்படி 50 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றும் நடுவர் மற்றும் முன்னணி முதலீட்டாளர்களின் வழிகாட்டுதல் மற்றும் பயிற்சியை பெறுவதுடன் முன்னணி தொலைக்காட்சியில் பார்வையாளர்களுக்கு தங்கள் கருத்துருவை முன்வைக்க வாய்ப்பை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.