News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

அண்ணா காலத்தில் தனி நாடு கோரிக்கையும் கருணாநிதி காலத்தில் மாநிய
சுயாட்சி உரிமைப் போராட்டமும் நடைபெற்றன என்றாலும் மத்திய அரசு பெரிதாக கண்டுகொண்டதில்லை.
இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானத்தை முதல்வர்
ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவித்திருக்கிறார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நான்கு நாட்கள்
விடுமுறைக்குப் பிறகு இன்று கூடும் நிலையில், மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு சவால்
விடும் வகையில் மாநில சுயாட்சி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்திருக்கிறார்.
இதுகுறித்து கடந்த 25ம் தேதி பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில சுயாட்சியை உறுதிசெய்து
மாநில உரிமைகளை நிலைநாட்டக் கூடிய வகையில், விரைவில் புதிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக
தெரிவித்திருந்தார்.

மாநிலத்துக்கு அதிகஅதிகாரம் வழங்கும் வகையிலான இந்த தீர்மானத்தை,
உறுப்பினர்களின் விவாதத்துக்குப் பிறகு நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
 மாநில உரிமை
மற்றும் அதிகாரத்தை மத்திய அரசு பறித்து வரும் நிலையில், மாநில சுயாட்சி தீர்மானத்தை
ஸ்டாலின் கொண்டு வருவதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. வரலாற்று முக்கியத்துவம்
வாய்ந்த இந்த தீர்மானம் தேசிய அளவில் கவனம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில் ஒரே நாடாக இருந்தது இல்லை.
இது, பல தேசங்களின் ஒன்றியம். இந்தியா விடுதலையடையும் போது 604 சமஸ்தானங்களும், 11
மாகாணங்களுமாக தனித்தனியே இருந்தது. வெள்ளையனை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்த
சமஸ்தானங்களே மாகாணங்களுக்குள் இணைக்கப்பட்டிருந்தது. வெள்ளையனுக்கு கப்பம் கட்டி வாழ்ந்தவர்கள்
தனி சமஸ்தானங்களாக இருந்தனர். இந்தியா – பாகிஸ்தான் என இரண்டாகப் பிரிந்தது. இந்தியாவோடு
552 சமஸ்தானங்கள் இணையவும், பாகிஸ்தானோடு 49 சமஸ்தானங்கள் இணையவும் ஒப்புக் கொண்டன.
3 சமஸ்தானங்கள் பேச்சுவார்த்தை, ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு இணைக்கப்பட்டன.

பல மொழி, பல பண்பாடு. இவர்களை எப்படி இணைத்து இந்தியாவுக்கு சட்டமியற்றுவது
என ஆலோசித்தனர். எனவே தான் அரசமைப்புச் சட்டத்தை எழுத அண்ணல் அம்பேத்கர் தலைமையில்
குழு அமைத்தனர். மாநில சுயாட்சி தீர்மானம் இந்திய அரசியலமைப்பின் கூட்டாட்சி தத்துவத்தை
வலுப்படுத்துவதற்கு ஒரு முக்கிய படியாகும். திமுக, தனது அரசியல் கொள்கையாக மாநில சுயாட்சியை
முன்னிறுத்துவதால், மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்ற கோரிக்கையை இந்த தீர்மானம்
மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

மத்திய – மாநில உறவுகளில் சமநிலை: ஒன்றிய அரசின் சில கொள்கைகள்
(ஜிஎஸ்டி, நீட், புதிய கல்விக் கொள்கை போன்றவை) மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதாக
தமிழ்நாடு அரசு கருதுகிறது. இத்தீர்மானம் ஒன்றிய அரசுக்கு மாநிலங்களின் உரிமைகளை நினைவூட்டுவதாகவும்,
மாநிலங்களுக்கு அதிக நிதி மற்றும் நிர்வாக அதிகாரம் கோருவதாகவும் அமைகிறது. இந்திய
அரசியலமைப்பு மாநிலங்களுக்கு சில அதிகாரங்களை வழங்கினாலும், ஆளுநர்கள் மற்றும் ஒன்றிய
அரசின் தலையீடு மாநில அரசுகளின் செயல்பாடுகளைப் பாதிக்கிறது. உதாரணமாக, நீட் விலக்கு
மசோதா போன்றவற்றை ஆளுநர் திருப்பி அனுப்பியது மாநில உரிமைகளுக்கு எதிரானதாகக் கருதப்படுகிறது.

இதுகுறித்து இன்று சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,
‘’நீட் காரணமாக மாணவர்கள் உயிரை இழந்திருக்கிறோம். பயிற்சி மையங்களுக்கு மட்டுமே நீட்
பயன் அளிக்கிறது. ஆகவே, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.  இதுபோன்ற தீர்மானங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
மாநில சுயாட்சி அதிகரிப்பதன் மூலம், தமிழ்நாடு அரசு தனது மக்களுக்குத் தேவையான திட்டங்களைஒன்றிய
அரசின் தலையீடு இன்றி செயல்படுத்த முடியும். உதாரணமாக, கல்வி மற்றும் சுகாதாரம் போன்றவற்றை
மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது மாநில அரசுக்கு அதிக உரிமை வழங்கும்.

மாநில அரசின் அடிப்படை உரிமைகளை போராடிப் பெற வேண்டிய இக்கட்டான
நிலையில் இருக்கிறோம். மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் இருந்தால் மட்டுமே மாநிலம் வளர்ச்சி
அடைய முடியும். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்று 
என்று மாநில சுயாட்சி மசோதா குறித்துப் பேசினார் முதல்வர் ஸ்டாலின்.

இதையடுத்து மாநில உரிமைகளைப் பாதுகாக்க ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தக் குழுவின் இடைக்கால அறிக்கை வரும் ஜனவரி 2026-ல் சமர்ப்பிக்கப்படும். இறுதி அறிக்கை இரண்டு ஆண்டுகளில் சமர்ப்பிக்கப்படும். இக்குழு மாநில உரிமைகளை மீட்டெடுப்பதற்கான பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும்.

இந்த குழுவில் ஓய்வுபெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசோக் வர்தன், திட்டக்குழு முன்னாள் தலைவர் நாகநாதன், ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக இருப்பர். இந்தக் குழுவின் இடைக்கால அறிக்கை வரும் ஜனவரி 2026-ல் சமர்ப்பிக்கப்படும். இறுதி அறிக்கை இரண்டு ஆண்டுகளில் சமர்ப்பிக்கப்படும் என்று ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

மத்திய மாநில மோதல் தீவிரமாகிறது. 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link