Share via:

ஒட்டுமொத்த மீடியாவும் ஸ்டாலின் சொல்வதை மட்டுமே செய்கின்றன. அதிமுக
செய்திகள் புறக்கணிக்கப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து
குற்றம் சாட்டி வருகிறார். இதனை உறுதி செய்வது போன்று இன்று ஊடகத்தின் முக்கியப் புள்ளிகளுக்கு
ஸ்டாலின் வெளிப்படையாகவே விருந்தளிக்கிறார்.
முதல்வராக பதவி ஏற்று நான்கு ஆண்டுகளை இன்றுடன் முதல்வர் ஸ்டாலின்
நிறைவு செய்கிறார். இன்று வரை வெளிப்படையாக நேரடியாக பத்திரிகையாளர் சந்திப்பை முதல்வர்
ஸ்டாலின் நடத்தியதே இல்லை. பயணங்களுக்கு இடையில் அவ்வப்போது சில கேள்விகளுக்கு மட்டுமே
பதில் அளித்துவருகிறார். முழுமையான பத்திரிகையாளர் சந்திப்புக்கு வாய்ப்பு வேண்டும்
என பத்திரிகையாளர்கள் கோரி வருகிறார்கள்.
இந்த நிலையில், இன்று பத்திரிகை மற்றும் மீடியாவில் ஆதிக்கம் செலுத்தும்
முக்கியமான புள்ளிகளை மட்டும் விருந்துக்கு அழைப்பு கொடுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
ஊடகத்தினரிடம் ஆட்சி குறித்த விமர்சனங்களைக் கேட்டுக்கொள்வதுடன், அடுத்து தேர்தல் நேரத்தில்
எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவிப்பு கொடுப்பார் என்றே சொல்லப்படுகிறது.
விருந்து சாப்பிடும் பத்திரிகையாளர்களுக்கு மதிப்பும் மரியாதையும்
கொடுப்பது மட்டுமின்றி, தேர்தல் நேரத்தில் நேரடியாக நிறுவனங்களுக்குப் பயன் கிடைக்கும்
வகையில் விளம்பரங்கள் வெளியிடுவதற்கும் ஸ்டாலின் உறுதி அளிப்பார் என்று சொல்லப்படுகிறது.
இதற்காக 250 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறார் என்று சவுக்கு சங்கர் வெளியிட்டுள்ளார்.
எது, எப்படியோ இன்று முக்கிய பத்திரிகையாளர்களுக்கு முக்கியமான
நாள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. என்ன பேசுகிறார்கள் என்பது நாளை தெரிந்துவிடும்.