Share via:
அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, நிரந்தரப் பகைவனும் இல்லை என்பார்கள். அப்படியொரு அதிசயக் காட்சியை தமிழகத்தில் சமீபத்தில் பார்க்க நேர்ந்திருக்கிறது.
இதுவரை தி.முக.வினர் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறிவந்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, கருணாநிதியின் சமாதிக்குப் போய் மலர் தூவியிருக்கிறார். பிரதமர் மோடி அவரை விட ஒரு படி மேலே போய், ‘இந்தியாவிலேயே மிகப்பெரும் அரசியல் ஞானி’ என்று புகழாரம் சூட்டியிருக்கிறார்.
இந்த பாராட்டு, மீட்டிங் எல்லாம் ஒரே ஒரு நாணய வெளியீட்டு விழாவுக்காக மட்டும் என்று சொன்னால், அதை யாருமே நம்ப மாட்டார்கள். ஏனென்றால், அந்த அளவுக்கு இரண்டு கட்சிகளும் அன்னியோன்யம் பாராட்டுகின்றன.
இதற்கு காரணம் இருக்கிறது. பா.ஜக. தனித்து நின்று தமிழகத்தில் இரண்டாவது இடத்துக்கு வருவதற்குப் போராடுகிறது. அ.தி.மு.க. தனித்து நிற்கும் பட்சத்தில் மும்முனைப் போட்டி நிலவும் பட்சத்தில் தி.மு.க.வுக்கு வெற்றி எளிதாகிவிடும். காங்கிரஸ் கட்சியைக் கழட்டிவிட்டாலும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை ஸ்டாலினுக்கு வந்துவிட்டது.
ஸ்டாலினை பெரிய அண்ணன் என்று நம்பிக்கொண்டிருந்த ராகுல் காந்தியும் தமிழக மக்களும் தான் அதிர்ந்து போய் நிற்கிறார்கள்.