Share via:

தொகுதி மறுசீரமைப்பு குறித்து ஒரு கற்பனையான பயத்தை உருவாக்க முயற்சிக்கிறார்
ஸ்டாலின் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று கருப்புக் கொடி போராட்டம் நடத்தியிருக்கிறார்.
அதேநேரம், இந்த கூட்டம் பற்றி டெல்லி பா.ஜ.க. அமைதி காக்கிறது. தொகுதி மறு சீரமைப்பு
நடக்கவே நடக்காது, அப்படியே நடந்தாலும் மக்களவையில் தமிழ்நாட்டிற்கு தற்போதுள்ள
7.18% பங்கு குறையாது என்று பிரதமர் மோடி அறிவித்தல் என்ன என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
தொகுதி மறுசீரமைப்பு அபாயம் குறித்து தென் மாநிலங்கள் போதிய விழிப்புணர்வுடன்
உள்ளன. அதனாலே இன்று மீட்டிங்கில் கலந்துகொண்ட தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி,
‘’கடந்த காலத்தில் பாஜகவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தபோது
“Demonetisation, GST, Article 370 ரத்து, CAA” என பல மக்கள் விரோத சட்டங்களை
விவாதமின்றி காலையில் மசோதாவை தாக்கல் செய்து மாலையில் நிறைவேற்றியது.
பாஜக நம்மை மக்கள் மன்றங்களில் பேசவே அனுமதிப்பதில்லை. அவர்கள்
நினைப்பதை முடிவாக எடுக்கிறார்கள். அதனால் இதை அவர்கள் கொண்டு வரமாட்டார்கள் என நினைக்க
வேண்டாம். மக்கள் தொகை சிறப்பாக கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு கிடைத்த தண்டனை தான்
இது. நாம் போராடி நம் உரிமைகளை காக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இம்முறை கட்சி வேறுபாடுகளை
களைந்து போராட வேண்டும். இந்த தொகுதி மறுசீரமைப்பு அநீதிக்கு எதிராக எங்கள் மாநில சட்டமன்றத்தில்
தீர்மானம் நிறைவேற்ற உள்ளேன்’ என்று பேசியிருக்கிறார்.
இந்த மீட்டிங் முடிந்த பிறகு நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு
தொடர்பான கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த கேரள
மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், தெலுங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப்
மாநில முதலமைச்சர் பகவந்த் மான் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், பாரத்
ராஷ்டிர சமிதி கட்சியின் கே.டி.ராமாராவ் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தனியே பேச்சுவார்த்தை
நடத்தியிருக்கிறார்கள்.
இந்த கூட்டம் பற்றி மத்திய பா.ஜ.க.வின் மோடியும் அமித் ஷாவும்
இது வரை பேசவில்லை என்பதே, இந்த கூட்டத்தின் அவசியத்தை உணர்த்துவதாக இருக்கிறது எனலாம்.