Share via:
இன்று 73வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் குவிந்துவருகின்றன. அதேநேரம், இதுவரை அதிமுக கூட்டணியில் இருந்த எஸ்டிபிஐ திமுகவுக்கு வந்துள்ளது.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. கடந்த முறை 3 தொகுதிகளில் போட்டியிட்ட ஐயூஎம்எல் தற்போது தமிழ்நாட்டில் 2 தொகுதிகளிலும் புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் போட்டியிட உள்ளது. அதே போன்று மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது
கடந்த தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சி இடம்பெற்று இருந்தது. தற்போது பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதால், அந்த கூட்டணியிலிருந்து எஸ்டிபிஐ கட்சி அண்மையில் வெளியேறியது. இன்று இந்த கட்சியும் திமுக கூட்டணியில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திமுக கூட்டணிக் கட்சிகள் நிரம்பிவழிகின்றன. இதுவரை 18 கட்சிகள் கூட்டணியாக உள்ளது.
1) திமுக. 2) காங்கிரஸ். 3) விடுதலை சிறுத்தைகள் கட்சி. 4) தேமுதிக. 5) மதிமுக. 6) கம்யூனிஸ்ட் (எம்) 7) கம்யூனிஸ்ட் (இந்திய) 8) இந்திய யூனியன் முஸ்லிம் லீக். 9) எஸ்டிபிஐ 10) மனித நேய கட்சி. 11) மனித நேய ஜனநாயக கட்சி. 12) மக்கள் நீதி மய்யம் 13 )தவாக (வேல்முருகன்) 14) முக்குலத்தோர் புலிப் படை. 15) கொங்கு இளைஞர் பேரவை . 16) கொங்கு மக்கள் தேசிய கட்சி. 17) ஆதிதிராவிட பேரவை. 18) மதிமுக (மல்லை சத்யா)
இதோடு கூட்டணி நிற்குமா அல்லது இன்னமும் தொடருமா என்று தெரியாமல் கூட்டணியில் இருக்கும் கட்சியினர் தவிக்கிறார்கள். ஒவ்வொரு கட்சி உள்ளே நுழையும்போதும் தங்களுக்கான இடங்கள் குறைகிறது.
திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை மற்றும் மனிதநேய ஜனநாயகக் கட்சி ஆகிய 5 கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சம்மதம் தெரிவித்துள்ளன. ஆக, ஸ்டாலின் வண்டி கிளம்பிடுச்சு. இன்று அதிமுக கூட்டணி முடிவாகுமா என்று பார்க்கலாம்.
