Share via:
பேச்சுவார்த்தைக்கு முதன்முதலாக பேச விரும்பிய காங்கிரஸ் கட்சியை
கண்டுகொள்ளாமல் சின்னக் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பது காங்கிரஸ்
கட்சியை உஷ்ணமாக்கியுள்ளது.
முதன்முறையாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தையை
திமுக தொடங்கியது. கடந்த முறை 3 தொகுதிகள் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த முறை 5 தொகுதிகள்
கேட்டார்கள். அவர்களுக்கு 2 தொகுதிகளுக்கு மேல் கொடுப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று
திமுக கை விரிக்கவே காதர் மொகிதீன் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
அதேபோல் மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதியில் போட்டியிட்டது. அவர்கள்
திமுக சின்னத்தில் போட்டியிடுவதால் இரண்டு சீட் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான்,
சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்காக சென்னை வந்த காங்கிரஸ்
தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ராவ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப்
பேசினார்.
ஸ்டாலினை சந்தித்து சுமார் 45 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்திய
பிறகு இன்று காலை கே.சி.வேணுகோபால் ராவ் சென்னை விமான நிலையத்திலிருந்து கொச்சி புறப்பட்டார்.
அதாவது திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடரும். தொகுதிகளில் எண்ணிக்கையை
தொகுதி பங்கீட்டுக் குழுக்களின் பேச்சுவார்த்தையில் இறுதி செய்யலாம் என முதலமைச்சர்
ஸ்டாலின் கூறியதால் அதிருப்தியில் சென்றதாகக் கூறப்படுகிறது. இன்னும் விசிக, கம்யூனிஸ்ட்
நிலைமை எப்படியாகப் போகுதோ..?
