Share via:
ஒரு காலத்தில் ஜெயலலிதா கட்சியில் 35 தொகுதிகள் வாங்கிய மதிமுக
இன்று திமுகவில் 4 தொகுதிகள் வாங்கும் அளவுக்கு சுருங்கிவிட்டது. கீழே விழுந்தாலும்
மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல், ‘’தி.மு.க கூட்டணியில் எங்களால் எந்த பிரச்சினையும்
வராது. புதிய கட்சிகள் வரவால் கடந்த தேர்தலில் போட்டியிட தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்க
வேண்டிய சூழல் உருவாகியுள்ளது’’ துரை.வைகோ பேசியிருப்பதை அவர் கட்சியினரே எதிர்க்கிறார்கள்.
மதிமுகவின் வரலாறு சுவாரஸ்யமானது. திமுகவுக்கு மாற்றாக வைகோ விளங்குவார்
என்று எதிர்பார்க்கப்பட்டது. அதனால், 2006 சட்டமன்ற தேர்தலில் அதிமுக 35 இடங்களைத்
ஒதுக்கியது. அடுத்த 2011 தேர்தலில் அதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 9 தொகுதிகள் கொடுத்தார்கள்
. அதனை ஏற்க மறுத்து, சட்டமன்றத் தேர்தலை புறக்கணித்தார்.
அதன் பிறகும் சரியான கூட்டணி அமையாமல் 2016ல் மக்கள் நலக் கூட்டணி
என்று கூறி படு தோல்வியை சந்தித்தார் வைகோ. இதையடுத்தே திமுகவில் ஐக்கியமானார். 2021
திமுக கூட்டணியில் வெறும் 6 சட்டமன்ற தொகுதிகளை பெற்றுக்கொண்டு 4 சட்டமன்ற தொகுதிகளில்
வென்றார். அப்போது அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர்.
இப்போது 2026 திமுக கூட்டணியில் வெறும் 4 சட்டமன்ற தொகுதிகள் மட்டுமே
கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் 3 உதயசூரியன் சின்னத்திலும் ஒரு சட்டமன்றத் தொகுதியில்
தனி சின்னத்திலும் போட்டியிடுவதாகக் கூறி ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுள்ளார்.
கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிவிட்டது. இதே பாணியில் விடுதலை சிறுத்தைகளுக்கும்
சீட் குறைப்பு இருக்கும் என்ற அச்சத்தில் இப்போதே திருமாவளவன் நடுங்கத் தொடங்கிவிட்டார்.
