Share via:

பஹல்காம் தாக்குதலை அடுத்து, ‘அமித்ஷா பதவி விலக வேண்டும்’ என்று
தி.மு.க.வினர் கடுமையாக குரல் எழுப்பிவந்தனர். தீவிரவாதத் தாக்குதலை தடுக்க முடியாத
பிரதமர் என்று மோடியை கிண்டல் செய்தனர்.
அதேபோன்று இந்திய ராணுவம் பதில் தாக்குதல் தொடங்கப்பட்ட நிலையில்,
‘போர் என்பது மோசமான விளைவுகளை உருவாக்கும்’ என்று பாடம் நடத்தினார்கள். அதேநேரம் காங்கிரஸ்
உள்ளிட்ட அத்தனை கட்சிகளும் போர் ஆதரவு நிலைப்பாடு எடுத்த நிலையில், மு.க.ஸ்டாலினும்
தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு மோடிக்கு ஆதரவு தெரிவித்தார்.
இதன் உச்சகட்டமாக மோடியின் ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து
பேரணிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் ஸ்டாலின். இன்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
‘’தீவிரவாதத்தை வளர்த்தெடுத்து, தான் கெட்டதோடு இந்தியாவிலும் அத்துமீறல்களில் ஈடுபடுகிறது
பாகிஸ்தான். நம்மைக் காக்க வீரத்துடன் போர் நடத்தும் இந்திய இராணுவத்தினருக்கு நம்
ஆதரவை வெளிப்படுத்தும் நேரம் இது. நாளை மாலை 5 மணிக்கு DGP அலுவலகத்தில் இருந்து தீவுத்திடல்
போர் நினைவுச் சின்னம் வரை,
எனது தலைமையில் முன்னாள் படைவீரர்கள், அமைச்சர் பெருமக்கள், பொதுமக்கள்,
மாணவர்கள் பங்குபெறும் பேரணி நடைபெறும். மக்கள் அனைவரும் பங்கேற்று நம் ஒற்றுமையையும்
உறுதியையும் காட்டுவோம்’’ என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.
நேற்று வரையிலும் மோடிக்கும் போருக்கும் எதிர்ப்பு நிலை காட்டிய
உடன்பிறப்புகள் தீடீரென ஆதரவு நிலை எடுக்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சிகளே செய்யத் தயங்கும் அளவுக்கு மோடிக்கு ஆதரவு காட்டியிருக்கும்
ஸ்டாலின் செயலைக் கண்டு அவரது கட்சியினர் அதிர்ந்து நிற்கிறார்கள்.