Share via:
’சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சியைக் காணவந்து, கடும் வெயில் மற்றும் மருத்துவக் காரணங்களால் ஐவர் உயிரிழந்தது மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது’ என்று முதல்வர் ஸ்டாலின், உயிர் இழந்தவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 5 லட்ச ரூபாய் இழப்பீடு அறிவித்திருப்பது கடும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
விழாவுக்கு மிகச்சரியான ஏற்பாடுகள் செய்திருந்ததாகவும் வெப்பம் மற்றும் மருத்துவக் காரணங்களாலே மக்கள் மரணம் அடைந்திருப்பதாக ஸ்டாலின் விஷயத்தை திசை திருப்புவது மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. வெப்பம் இருக்கும் என்பது தெரிந்துதானே முதல்வர் பார்க்கும் பந்தலுக்கு குளுகுளு வசதி செய்யப்படிருந்தது, கூலிங் கிளாஸ் போட்டு நிகழ்ச்சியைப் பார்த்தார். ஆனால், மக்களுக்கு மட்டும் தேவையான குடிநீர் வசதிகள், போதுமான ஆம்புலன்ஸ் வசதிகள், முதலுதவி வசதிகள், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது யார் தவறு என்று கேட்கிறார்கள்.
நிர்வாகச் சீர்கேடு நடந்திருப்பதைப் புரிந்துகொண்டால் தான் அடுத்து இதுபோன்ற நிகழ்ச்சிகளை திறமையாகத் திட்டமிட முடியும். ஆனால், குளறுபடி நடந்திருப்பதை ஏற்றுக்கொள்வதற்கு மனமின்றி மருத்துவக் காரணங்களால் மரணம் என்று அறிவிப்பது என்ன நியாயம்..? விமானப்படை சாகச நிகழ்வில் இறந்தவரின் மனைவி 2 மணி நேரமாக ஆம்புலன்ஸ் வசதி கூட செய்துத் தரவில்லை என்று கதறி அழுகிறார். 15 லட்சம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 13 லட்சம் பேரே கூடியிருந்தார்கள். இவர்களை நிர்வகிக்க முடியாமல் வெயிலின் மீதும் மருத்துவக் காரணங்கள் சொல்லியும் தப்பிப்பது நியாயமா.? ஏன் இங்கு வந்த மக்கள் தற்கொலை செய்து இறந்துவிட்டார்கள் என்று அறிவிக்கலாமே என்று மக்கள் கோபமாகிறார்கள்.
விடியா அரசு, கையாலாகாத ஆட்சி, பொம்மை முதல்வர் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்வதை உண்மை என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார் ஸ்டாலின். திராவிட மாடல் சூப்பரோ சூப்பர்.