News

மோடியை வரவேற்பாரா செங்கோட்டையன்..? எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி

Follow Us

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காக தமிழகம் முழுக்க அண்ணா தி.மு.க. விதம்விதமாகப் போராட்டம் நடத்திவருகிறது. இந்த நிலையில் போராட்டத்துக்கு அனுமதி மறுக்கும் தி.மு.க. அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டும் என்பதற்காக, ‘குற்றவாளிகளின் கூடாரம் தி.மு.க.,’ ‘யார் அந்த சார்’, ‘ஸேவ் அவர் டாட்டர்’ என்பது போன்ற ஹேஸ்டேக் போட்டு மிரட்டி வருகிறார்கள். இந்த நிலையில் அண்ணா தி மு க ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அண்ணா தி மு க அறிவிப்பு செய்திருக்கிறது.

இது குறித்து எடப்பாடி பழனிசாமி, ‘’அண்ணா பல்கலை வளாக பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டியும், தமிழ்நாட்டில் தொடர்ந்து சிறுமிகள், கல்லூரி மாணவிகள், பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறி ஆக்கியுள்ள ஸ்டாலின் அரசைக் கண்டித்து அ.தி.மு.க.  தமிழ்நாடு முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் நிலையில், ஆர்ப்பாட்டத்தில் சென்று கலந்து கொண்ட கழகத்தினரை காவல்துறையினர் கைது செய்து அராஜக அடக்கமுறையில் ஈடுபட்டு வருகின்றனர்,

மக்கள் குரலின் பிரதிபலிப்பான எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்க முயலும் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் திமுகவை சேர்ந்தவர், போதைப்பொருள் மாபியா வழக்கில் திமுக அயலக அணி மாவட்ட அமைப்பாளர், என நீளும் திமுக நிர்வாகிகளின் குற்றப்பின்னணியாலும், ஞானசேகரன் குறித்து வெளிவரும் புகைப்படங்கள் மற்றும் தகவல்களாலும், திமுக அரசு இந்த வழக்கிலும் ஏதேனும் அரசியல் தலையீடு ஏற்படுத்துமோ என்ற சந்தேகம் நாளுக்கு நாள் வலுக்கிறது.

அனைத்து உண்மைக் குற்றவாளிகளும் பிடிபட்டு பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அஇஅதிமுகவின் போராட்டம் தொடரும்! இந்த வழக்கில் ஞானசேகரன் குறிப்பிட்ட அந்த நபர் யார்’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த விவகாரத்தையொட்டி மீண்டும் அ.தி.மு.க. புத்துணர்வுடன் செயலாற்றி வருகிறது. இதுதான் எதிர்க்கட்சியாக எடப்பாடி பழனிசாமி செய்யவேண்டிய சரியான பணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link