News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

பத்து வருடம் ஆட்சியில் இல்லாத தி.மு.க.வுக்கு கடந்த 2021 வாழ்வா சாவா போராட்டமாக இருந்தது. ஆகவே, 360 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து தி.மு.க., வியூக வகுப்பாளராக பிரஷாந்த் கிஷோர் நியமனம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, 2021 சட்டசபை தேர்தலில், வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் ஐபேக் நிறுவனம் முன்னின்று செய்ய, தி.மு.க., மட்டும், 135 இடங்களில் வெற்றி பெற்று, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. கூட்டணி கட்சியினரும் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றனர். ஒரு நாளைக்கு, 1 கோடி என, சன்மானம் பெற்ற ஐபேக் நிறுவனம், தேர்தல் வெற்றிக்குப் பின் கிளம்பியது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அவரது ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. அதன் பிறகு ஸ்டாலின் மருமகன் சபரீசனின் சகோதரி நிறுவனமான, ‘பென்’ வியூக வகுப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தது.

இந்த நிலையில் வரும் 2026 சட்டசபை தேர்தலுக்காக, மீண்டும் பிரஷாந்த் கிஷோரை நியமிக்க தி.மு.க. முடிவெடுத்துள்ளது. இதற்காக, டில்லியில் இருந்து சென்னைக்கு வந்த பிரஷாந்த் கிஷோர், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவருடைய மருமகன் சபரீசனை சந்தித்து பேசி, ஒப்பந்தம் கையெழுத்தானதாக சொல்லப்படுகிறது.

அடுத்த சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரு ஆண்டுகளே இருக்கும் நிலையில், கட்டாய வெற்றிக்கு பிரஷாந்த் கிஷோரின் வியூக வகுப்பு தி.மு.க.,வுக்கு தேவைப்படுகிறது. அதற்காக, மீண்டும் பிரஷாந்த் கிஷோர் அழைக்கப்பட்டிருக்கிறார். இந்த முறையும் தினமும் 1 கோடி ரூபாய் என்ற அடிப்படையில் 500 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது 500 நாட்கள் பணியாற்றப் போகிறார்களாம்.

இன்னமும் அதிகாரபூர்வமாக தி.மு.க.வில் இருந்து அல்லது பிரசாந்த் கிஷோரிடமிருந்து வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link