Share via:
திமுக இளைஞரணி மாநாடு மிகச்சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது.
இந்த மாநாட்டில் கழக அரசு செய்துவரும் கல்விப் புரட்சியையும் சாதனையையும் பேசிய அமைச்சர்
அன்பில் மகேஷ் அடுத்து பேசிய விவகாரம் பெரும் கைதட்டலைப் பெற்றது.
அதாவது, ‘இந்தியா’ (INDIA) கூட்டணியில் பிரதமர் என்ற பார்வை நம்
முதலமைச்சர் ஸ்டாலின் பக்கம் திரும்பியுள்ளது; இது சாதாரண விஷயம் அல்ல. அப்படி பிரதமர்
வாய்ப்பு வந்தால் அதனை முதல்வர் தட்டிக்கழிக்க கூடாது; ஒரு கை பார்த்துவிட வேண்டும்”
என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதை கேட்டு சேலம் இளைஞரணி மாநாடே கைதட்டல் மற்றும்
விசில் சத்தத்தால் அதிர்ந்தது.
’’இன்றைக்கு நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்தும் திராவிட
மாடல் ஆட்சியை பார்த்து ஒட்டுமொத்த இந்தியாவும் ஆச்சரியப்படுகின்றன. மக்களுக்கு நாம்
வழங்கப்படக் கூடிய நலத்திட்டங்கள், சலுகைகளை பார்த்து, பிற மாநிலங்களும் அதை செயல்படுத்தி
வருகின்றன. எனவே, தமிழக முதல்வரை வாழும் நீதிக்கட்சி தலைவர் என்றே சொல்லலாம். இல்லம்
தேடி கல்வி திட்டம், காலை உணவு திட்டம், பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம்
என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நமது முதல்வர், இந்தியாவுக்கே எடுத்துக்காட்டான
முதல்வராக விளங்குகிறார்.
ஆனால், மக்கள் மூலம் பதவிக்கு வந்த மத்திய அரசு ஆட்சியாளர்கள்,
இப்போது ஆடாத ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான பதிலடி நாடாளுமன்றத்
தேர்தலில் மக்கள் கொடுப்பார்கள். இந்த தருணத்தில் முதல்வரிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறேன்.
‘இந்தியா’ கூட்டணியில் நீங்கள் கைகாட்டும் நபர் தான் பிரதமர் என பலரும் சொல்கிறார்கள்.
அதே நேரத்தில், நம்பர் 1 முதல்வரான உங்களை தான் அடுத்த பிரதமராக வர வேண்டும் என்று
கைக்காட்டுகிறது.
அப்படி பிரதமர் வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் அதை தட்டிக்கழிக்க கூடாது. அதையும் ஒரு
கை பார்த்துவிட வேண்டும். நீங்கள் வகுத்து தந்த பாதைகள், கொள்கைகளை அடுத்தக் கட்டத்திற்கு
கொண்டு போக அமைச்சர் உதயநிதி இருக்கிறார். அதனால் எதை பற்றியும் நீங்கள் கவலைப்பட
வேண்டாம்…’’ என்று பேசியிருக்கிறார்.
ஸ்டாலின் பிரதமர் ஆகிவிடால் உதயநிதி தமிழகத்தின் முதல்வர் ஆகிவிடுவார்
என்பதையே பேசியிருக்கிறார் என்பது இளைஞர் அணி மாநாட்டில் ஹாட் அண்ட் சர்ச்சை விஷயமாக
மாறியிருக்கிறது.
ராகுல் காந்தியை இந்திய பிரதமராக முன்மொழிந்த ஸ்டாலின் இதற்கு
எந்த பதிலும் சொல்லவில்லை என்பதுதான் ஆச்சர்யம்.