News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தமிழகத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு சமீபத்தில் நடைபெற்று சுமார் 6.64 லட்சம் கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் 28ம் தேதி ஸ்டாலின் வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்குப் பயணமாகும் ஸ்டாலின் அங்கு தொழிலதிபர்களுடன் கலந்துரையாடவும், முதலீடுகளை ஈர்ப்பதற்கும் ஏற்பாடுகள் நடத்தப்பட்டுள்ளன. சுமார் 10 நாட்கள் பயணம் முடிந்து பிப்ரவரி முதல் வாரத்தில் நாடு திரும்புகிறார்.

இந்த நிலையில் இன்று காலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. நாடு திரும்பியதும் சட்டமன்ற கூட்டத்தொடரின் முதல் கூட்டத்தொடர், பட்ஜெட் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் மேலும் சில நலத்திட்ட உதவிகள் அறிவிக்கப்படுவதற்கான ஆலோசனையும் நடைபெறுகிறது.

தான் சென்னையில் இல்லாத காலகட்டத்தில் எக்குத்தப்பாக அமைச்சர்கள் நடந்துகொள்ளக் கூடாது என்றும், தேவையில்லாத வம்பு, வழக்குகளில் சிக்கிவிடக் கூடாது என்பதை எச்சரிப்பதற்காகவே இந்த கூட்டம் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சரிதான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link