Share via:
முதல்வர் ஸ்டாலினை பொம்மை முதல்வர் என்றும் தி.மு.க. ஆட்சியை விடியா
ஆட்சி என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துவருகிறார்.
இதை உண்மை என்று மெய்ப்பிப்பது போலவே விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு மாணவர்கள் உறுதிமொழி
எடுக்க வேண்டும் என்று வெளியான சுற்றறிக்கை கடுமையான சர்ச்சையாகியிருக்கிறது.
செப்டம்பர் 7 அன்று நடைபெற இருக்கும் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி
பள்ளிகளில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அந்த அறிக்கையில்,
‘பாதுகாப்பான முறையில், பிளாஸ்டிக் இல்லாமல் விநாயகர் சதுர்ச்சி கொண்டாடுவேன்’, சூழலுக்கு
உகந்த பூக்கள், இலைகள் மற்றும் பொருட்களை பூஜைக்கு பயன்படுத்துவோம். விநாயகர் சிலைகளை
தமிழ அரசு அறிவித்த இட்னக்களில் மட்டுமே கரைப்போம்.
ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளைத் தவிர்ப்போம். ஒருமுறை
பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் சிலைகளை தவிர்ப்போம். விழா முடிந்தவுடன் குப்பைகளை
உரிய இடத்தில் போடுவோம் என்பன உள்ளிட்ட உறுதிமொழிகள் அதில் கூறப்பட்டு இருந்தன.
அரசு விழாவாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படாத நிலையில், இது பல்வேறு
சர்ச்சைகளைக் கிளப்பியது. தமிழகத்தில் நடப்பது தி.மு.க, ஆட்சியா அல்லது பா.ஜ.க.
ஆட்சியா என்று தி.மு.க,வினரே அதிர்ச்சி அடைந்தார்கள்.
இதையடுத்து, அரசுப் பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக உறுதிமொழி
ஏற்க அறிவுறுத்தி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், தவறான சுற்றறிக்கை அனுப்பிய அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்
என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.
இந்த நிலையில், ’’தமிழக அரசின் ஆட்சிப் பணிகளில் ஆர்.எஸ்.எஸ்.
மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளே ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.
அவர்களே ஆட்சியை நடத்துகிறார்கள். தமிழகத்தில் சனாதனத்தை பரப்புவதில் பல்வேறு வழிமுறைகளை
இவர்கள் கையாளுகிறார்கள். ஸ்டாலின் பொம்மை முதல்வராக இருப்பதாலே, இப்படி ஒரு சுற்றரிக்கையை
தைரியமாக அனுப்புகிறார்கள்’’ தி.முக.வினர் வருந்துகிறார்கள்.
முருகன் மாநாடு நடத்தியதன் விளைவு தான் இப்படி எல்லை மீறிப் போகிறது.
இனிமேல் தி.மு.க.வினர் எல்லோரும் பொட்டு வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவிப்பு வந்தாலும்
வரலாம்.