Share via:
தி.மு.க. ஆட்சி என்றாலே இருண்ட ஆட்சி என்பது போல் பவர் கட் நினைவுக்கும் வரும். 2011 தேர்தலில் பவர் கட் காரணமாகவே கருணாநிதியால் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
அடுத்து அ.தி.மு.க. அரசும் அடுத்து வந்திருக்கும் தி.மு.க. அரசும் வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கும் வேலையைச் செய்கிறார்களே தவிர, தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றும் முயற்சியை மேற்கொள்ளவில்லை. அதனாலே இப்போதும் அடிக்கடி பவர் கட் ஏற்படும் சூழல் நிலவுகிறது.
சென்னையை அடுத்துள்ள அலமாதி துணை மின் நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் சென்னையில் பெரும்பாலான இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இரவு 10.15 மணியளவில் கோயம்பேடு, மதுரவாயல் தொடங்கி திருவான்மியூர், பெசன்ட் நகர், வேளச்சேரி வரை என கிட்டத்தட்ட பெரும்பாலன இடங்களிலும் மின் விநியோகம் தடைபட்டது.
தூங்கமுடியாமல் மக்கள் ரோட்டுக்கு வந்து போராடத் தொடங்கிய பிறகு, இரவு 2 மணிக்குப் பிறகே நிலைமை ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஸ்டாலின் அரசாங்கத்தை விடியா அரசு என்று எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து விமர்சனம் செய்வது உண்மை என்பதை நேற்றைய நிகழ்வு சுட்டிக் காட்டியிருக்கிறது.
அமெரிக்காவில் இருந்து திரும்பும் ஸ்டாலினுக்கு பவர் கட் வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள். இனியாவது திருந்துவார்களா என்று பார்க்கலாம்.