Share via:

மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் புதிய கல்விக் கொள்கையை அனுமதிக்க
மாட்டோம் என்று கூறியதால் 5,000 கோடி ரூபாயை தமிழகம் இழக்கிறது என்று மத்திய அமைச்சர்
தர்மேந்திர பிரதான் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்,
‘’நாங்கள் கட்டிய வரியைத் தான் கேட்கிறோம். தர முடியாது என்று கூறினால் நாங்களும் வரி
தர முடியாது என்று சொல்வதற்கு ஒரு நொடி போதும்’’ என்று வெளிப்படையாக மத்திய அரசுக்கு
சவால் விட்டார்.
இந்த நிலையில் மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கும்
வகையில் அதிரடி சட்டம் புகுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மாநில அரசின் அனுமதியில்லாமலேயே
சி.பி.எஸ்.இ. பள்ளிகளைத் தொடங்கிக் கொள்ள மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அனுமதி அளித்துள்ளது.
பொதுவாக சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்க மாநில அரசின் தடையில்லா சான்று தேவை என்ற நடைமுறை
இருந்து வந்தது. இந்நிலையில், மாநில அரசின் அனுமதி இல்லாமலே இனி சி.பி.எஸ்.இ. பள்ளிகளைத்
தொடங்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதைக் கண்டு குஷியாகும் பா.ஜ.க.வினர், ‘’தனியார் சி.பி.எஸ்.இ.
பள்ளி தொடங்க அனுமதி கோரி மாநில அரசின் தடையில்லா சான்றை முதலில் பெறாமல் நேரடியாக
மத்திய அரசிடம் விண்ணப்பிக்கலாம். ஸ்டாலின் அதிகாரம் பறிக்கப்பட்டது…’’ என்று குஷியாகிறார்கள்.
இதற்கு உடன்பிறப்புகள், ‘’மாநில அரசை தவிர்த்து விட்டு ஒன்றிய
அரசிடம் நேரடியாக சிபிஎஸ்சி பள்ளிகள் அனுமதி வாங்கிக் கொள்ளட்டும். ஆனால், இந்த பள்ளிகளுக்கு
எல்லாம் இனிமேல் கட்டிட அனுமதி கிடைக்காது. மின்சார வாரியத்திடம் அனுமதி கேட்டால் கிடைக்காது…
தண்ணீர் கொடுக்க முடியாது தீயணைப்புத் துறையின்
அனுமதி கிடைக்காது’’ என்று அலையவிட்டால் என்னாகும் தெரியுமா..? ஒன்றிய அரசுகிட்ட நேரடியா
அங்கீகாரம் வாங்கிருந்தாலும் மாநில அரசு அனுமதி இல்லைன்னா ஒரு செங்கல் கூட வைக்க முடியாது’’
என்று சவால் விடுகிறார்கள்.