Share via:
அமெரிக்கா, இங்கிலாந்து
போன்ற நாடுகளில் புயல் செல்லும் வழி, வீசும் காற்றின் வேகம், பெய்யும் மழையின் அளவு,
கடக்கும் நேரம் ஆகியவற்றை கிட்டத்தட்ட துல்லியமாகக் கணிக்கிறார்கள். அதனால், தேவையான
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துவிட முடிகிறது.
நம் நாட்டில் புயல்
எந்தப் பகுதியில் கரையைக் கடக்கும் என்பதைக் கூட வானிலை மையத்தால் இன்றும் சரியாகக்
கணிக்க இயலவில்லை. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை ஒரு பக்கம் எடுக்கும் போது,
இன்னொரு பக்கம் நகர்கிறது. அங்கே எடுக்கும் முன்பு, அடுத்த பக்கம் நகர்கிறது.
விழுப்புரம் மாவட்டம்
மயிலத்தில் 24 மணி நேரத்தில் 50செமீ மழை பதிவானதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அதுவும்
இதில் பெருமளவு மழை சில மணிநேரங்களில் கொட்டித் தீர்த்துள்ளது. கள்ளக்குறிச்சி, பாண்டிச்சேரியில்
மழை கொட்டுகிறது. இவற்றை எல்லாம் வானிலை மையத்தால் துல்லியமாக முன்கூட்டியே கணிக்க
இயலவே இல்லை. மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் காற்று, மரங்கள் சரிவு, விடாதுபெய்த மழை,
மின்சாரத் தடை போன்ற எக்கச்சக பிரச்னைகள்.
ஸ்டாலின் தொடங்கி
தூய்மைப் பணியாளர்கள் வரை 24 மணி நேரம் பணியாற்றினாலும் முழுமையாகவும் திறமையாகவும்
கையாள முடியாத நிலையே நீடிக்கிறது. கடந்த முறை தென் தமிழகத்தில் மிக்ஜம் புயல் அடித்த
நேரத்திலும் வானிலை மையத்தின் தவறுதலான கணிப்புகள் அப்பட்டமாக வெளிப்பட்டன. இப்போதும்
அதுவே நிகழ்கிறது.
இதுகுறித்து சுற்றுச்சூழல்
ஆர்வலர் சுந்தர்ராஜன் எழுப்பியிருக்கும் கேள்வி முக்கியமானது. அதாவ்து, ‘’ வெப்பமண்டல பகுதியின் உள்ள வானிலையை
கணிப்பது கடினம், ஆனால் நமக்கான
காலநிலை மாதிரிகள் இல்லாமல் போவதும்
மிகப்பெரிய பிரச்சனையாகும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய
மாதிரிகளை வைத்து நாம் கணிப்பதுதான்
பெரிய சவால்.
ஒன்றிய அரசுக்கு இப்போது எதை
முக்கியமாக கருதுகிறது? கியான்வாபி மசூதியின் கீழ் சிவன்
அல்லது ராமர் சிலை உள்ளதா
என்று பார்ப்பதும், சம்பல் மசூதியை ஆய்வு
செய்வதும்தான். கடந்த பலஆண்டுகளாக சொல்லிவருகிறோம்,
இந்தியாவிற்கான காலநிலை மாதிரிகளை உருவாக்க
வேண்டுமென்று. காங்கிரஸ் கட்சியின் ஜெயராம்
ரமேஷ் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த சமயத்தில்
100 கோடியை ஒதுக்கி indiyan institute
of tropical meterology என்கிற
நிறுவனத்தை அமைத்திருக்கவிட்டால் இந்த அளவிற்கு கூட
நாம் ஆய்வுகளை செய்திருக்கமாட்டோம். ஆனால்
கடந்த 11வருடங்களாக ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசு
இந்தியாவிற்கான காலநிலை மாதிரிகளை உருவாக்க
எந்தவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.
இந்தியாவின்
வானிலையை தீர்மானிப்பதில் எல்–நினோ, ல–நினா, அமோக் rossby அலைகள்
போன்ற பல்வேறு உலகளாவிய நிகழ்வுகள்
இருந்தாலும், இந்த பகுதியில் உள்ள
சில பிரத்தியேகமான நிகழ்வுகள்
இந்தியாவின் வானிலையை தீர்மானிப்பதில் அல்லது
தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்திய பெருங்கடல் இருமுனை,
இந்த பகுதியில் உள்ள பெருங்கடலின்
வெப்பம் போன்றவை தாக்கத்தை ஏற்படுத்தும்,
எனவே தான் சொல்கிறோம் இந்தியாவிற்கான
காலநிலை மாதிரிகள் தேவை என்று.
காலநிலை மாற்றம் கொண்டுவரக்கூடிய பேரிடர்கள்
ஒருபக்கம் இன்னொருபக்கம் ஒன்றிய அரசின் அறிவியல்
தன்மையற்ற செயல்பாடு’’ என்று கூறியிருக்கிறார்.
அரசுடன் சேர்ந்து
தி.மு.க.வினரையும் களத்தில் இறக்கிவிட்டுள்ளது அரசு. ஆனாலும், போதாமையால் சென்னை மிதக்கிறது
என்பதே பரிதாபம். வானிலை மையத்தை சர்வதேச தரத்துக்கு உயர்த்தாவிட்டால் இன்னும் எத்தனை
ஆண்டுகள் ஆனாலும் மக்கள் அவதிப்பட வேண்டியது தான்.