Share via:
அமெரிக்காவின் சிகாகோ
நகரில் பிரம்மாண்டாக நடைபெற்ற தமிழ் கலை நிகழ்ச்சியில், பட்டு வேட்டி, சட்டை அணிந்து
கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால்,
இந்த கூட்டம் உண்மையானது இல்லை, போட்டோ ஷாப் என்று அ.தி.மு.க.வினர் சந்தேகம் எழுப்பி
வருகிறார்கள்.
கடந்த இரண்டு நாட்களாக
ஸ்டாலினின் உண்மையான புகைப்படம் வெளிவரவில்லை என்று அ.தி.மு.க.வினர் சந்தேகம் எழுப்பியதையடுத்து,
கையெழுத்துப் போடும் படம் ஒன்றை ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் விநாயக
சதுர்த்தியன்று ஸ்டாலினுக்குப் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுவதாக தகவலும் செய்தியும்
வெளியானது.
இந்தக் கூட்டத்தில்
பேசிய ஸ்டாலின், ‘’அமெரிக்க வாழ் தமிழர்களின் முகத்தை மட்டும் பார்த்து கொண்டே இருந்தால்
போதும் என்று தோன்றுகிறது. நான் இன்னும் தமிழ் மண்ணில் தான் இருக்கிறேனோ என்ற எண்ணம்
வருகிறது.
நம்முடைய தமிழக அரசால்
செயல்படுத்தப்பட்டு வரும் வேர்களை தேடி திட்டத்தின் மூலம் தாய் மண்ணை பார்க்க இளைஞர்கள்
வந்திருந்தனர். அவர்கள் துண்டிக்கப்பட்ட உறவை புதுப்பிக்க வாய்ப்பாக அமைந்தது. அவர்களின்
மகிழ்ச்சியை எண்ணி நானும் மகிழ்கிறேன். நமது கலைஞர் முதலமைச்சராக இருந்த போது, இதே
சிகாகோ நகருக்கு வருகை புரிந்திருக்கிறார்.
இங்குள்ள சிகாகோ
பல்கலைக்கழகத்தின் அரசியல் கருத்தரங்கில் உரையாற்றியுள்ளார். பின்னர் நியூயார்க் சென்று
நியூயார்க் தமிழ் சங்கத்தை தொடங்கி வைத்தார். அப்போது எப்படி தமிழகத்தின் முதலமைச்சர்
என்ற தகுதியுடன் கலைஞர் வந்தாரோ, அதேபோல் நானும் தமிழகத்தின் முதலமைச்சராக வருகை புரிந்துள்ளேன்’’
என்று பேசியிருக்கிறார்.
இந்த நிலையில் போட்டோ
ஷாப் செய்யப்பட்ட புகைப்படத்தை வைத்துக்கொண்டு எதற்காக இப்படி பொய் சொல்லி திரிகிறீர்கள்
என்று புகார் சொல்லி வருகிறார்கள். இனி, எடப்பாடி பழனிசாமியையும் கூடவே கூட்டிப் போக
வேண்டும் போலிருக்கிறதே.