Share via:

டாக்டர் ராமதாஸ்க்கும் அன்புமணிக்கும் இடையிலான லடாயை ஒட்டி பல்வேறு யூகங்கள் வெளியாகின. திமுக அல்லது அதிமுகவுடன் ராமதாஸ் கூட்டணி வைப்பதற்கு விரும்புகிறார் என்றே சொல்லப்பட்டது. பா.ஜ.க. மூலம் அ.தி.மு.க. கூட்டணியில் இணைவதை விட, நேரடியாக கூட்டணி வைப்பது அல்லது தி.மு.க. கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரியவந்தால், இதன் மூலம் பா.ம.க.வுக்கு டிமாண்ட் அதிகரிக்கும் என்றும் அதற்காகவே இந்த நாடகம் என்றும் கூறப்பட்டு வந்தது.
இதையடுத்தே திருமாவளவனுக்கு தி.மு.க. கூட்டணியில் இடம் இல்லை என்றும் யூகங்கள் கிளம்பின. இந்த விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடுமையான அதிருப்தியில் இருந்தனர்.
இந்த நிலையில் ஆங்கில பத்திரிகைக்கு பேட்டியளித்த ஸ்டாலின், ‘’தி.மு.க.வில் பழைய கூட்டணியே தொடர்கிறது. டாக்டர் ராமதாஸ் கட்சி தொடர்பாக வரும் தகவல்களில் உண்மை இல்லை’’ என்று தெளிவாகக் கூறிவிட்டார்.
இதையடுத்தே திருமாவளவன் வெளியிட்டிருக்கும் வீடியோவில், கூட்டணியைக் குலைப்பதற்கு பா.ஜ.க.வினர் வதந்திகள் கிளப்புவதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார். விடுதலை சிறுத்தைகளும் ஹேப்பி மூடுக்கு வந்திருக்கிறார்கள். அப்பாவும் மகனும் தனித்தனியே பிரிந்து தி.மு.க.வின் பல்ஸ் பார்ப்பதற்கு டாக்டர் ராமதாஸ் போட்ட திட்டங்கள் இதன் மூலம் தவிடுபொடியாகியுள்ளது.