News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

சென்னை, காமராசர் சாலையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டார்கள். இதில் பல்வேறு நிகழ்வுகள் கவர்னரை திட்டமிட்டு சம்பவம் செய்யப்பட்டதாகவே கருதப்படுகிறது.

குறிப்பாக தஞ்சாவூர் – தென்னக பண்பாட்டு மையம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்திகளை இருவரும் பார்வையிட்டனர். இந்தியா முழுக்க பேசுபொருளாக இருந்த மணிப்பூர் கலவரத்தை பிரதமர் சென்று பார்வையிடவே இல்லை. இதனை வலியுறுத்தும் வகையில் மணிப்பூர் மாநில கலைக் குழுவினரின் மெய்தி மக்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படிருந்தது.

அதேபோல், திருவள்ளுவருக்கு சமீபத்தில் காவி சாயம் பூசியிருந்தார் கவர்னர். ஆகவே, ரத ஊர்வலத்தில் வெள்ளை உடை உடுத்திய திருவள்ளுவர் ஊர்தி இடம் பெற்றிந்தது.

இவிஎம் இயந்திரம் மூலமே பா.ஜ.க. தொடர்ந்து வெற்றி பெறுவதாக சொல்லப்பட்டு வருகிறது. ஆகவே, வாக்குச்சீட்டு நடைமுறையைக் கொண்டுவர வேண்டுமென நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்படுகிறது. இதனை வலியுறுத்தும் வகையில் குடவோலை மூலம் தேர்வு செய்யப்படும் சிற்பம் ஊர்வலத்தில் இடம் பிடித்தது.

மேலும், வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்கள், காந்தியடிகள் காவலர் பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், டாக்டர் நாராயணசாமி நாயுடு வேளாண்மை விருது, முதலமைச்சரின் சிறப்பு விருது, சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சரின் கோப்பைகள் ஆகிய பதக்கங்களையும், கோப்பைகளையும் ஸ்டாலின் வழங்கினார்.

மதுரை மாவட்டம் யா.கொட்டிகுளம் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துவதற்காக தனது 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை தானமாக வழங்கிய ஆயி அம்மாளுக்கு முதல்வரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

இதற்கு பதிலடியாக கவர்னர் என்ன பேசப்போகிறார் என்பதுதான் இப்போது பரபரப்பாக இருக்கிறது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link