Share via:

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்குப்
பிறகு 1000 கோடி ரூபாய் முறைகேடு என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அமலாக்கத்துறை
மேற்கொண்ட சோதனை மற்றும் அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சட்டவிரோதமானது என அறிவிக்கக்
கோரி டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு
வர உள்ளது
இது தொடர்பாக பேசும் அதிகாரிகள், ‘’கடந்த 10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை
அரசியல் தலைவர்கள் மீது PMLA சட்டத்தின் கீழ் 193 வழக்குகளை பதிவு செய்துள்ளது அந்த
வழக்குகளில் 2 பேர் குற்றவாளி என இதுவரை நிரூபித்துள்ளது. இதன் மூலம் அமலாக்கத்துறை
எதிர்க் கட்சிகளை மிரட்டுவதற்கு மட்டுமே பயன்படுகிறது என்பது தெரிகிறது. எனவே, அமலாக்கத்துறை
விசாரணைக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இனி அமலாக்கத்துறை தமிழகத்துக்குள் எந்தஒரு ரெய்டும் தமிழக அரசின்
அனுமதி இல்லாமல் செய்யக்கூடாது. அமலாக்கத்துறை கைப்பற்றிய அனைத்து ஆவணங்கள் உள்ளிட்டவைகளை
திருப்பித்தர உத்தரவிட வேண்டும்…. உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்து தமிழ்நாடு
டாஸ்மாக் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிரான வழக்கு
இன்று உயர் நீதிமன்றத்தில் வருகிறது. நீதிமன்றத்தில் தமிழகத்துக்கு சாதகமாக தீர்ப்பு
கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றாலும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது’’
என்கிறார்கள்.
இந்நிலையில் செந்தில்பாலாஜி டெல்லி விசிட் மர்மமும் வெளியாகியிருக்கிறது.
வழக்கறிஞரை மட்டுமே சந்திக்கச் சென்றதாகச் சொல்வது நம்பும்படி இல்லை என்று தி.மு.க.வினரே
கிண்டல் செய்கிறார்கள்.
மதுபான விவகாரத்தில் டெல்லி முதல்வர் போன்று தமிழக முதல்வர் ஸ்டாலினும்
சிக்குவார் என்று பேசிவந்த பா.ஜ.க.வினர் இப்போது அமைதி காப்பது ஆச்சர்யமான திருப்பமாகவே
பார்க்கப்படுகிறது. என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது.