Share via:
இன்று 71வது பிறந்த நாள் கொண்டாடும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி அத்தனை கூட்டணிக் கட்சியினரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தி.மு.க.வினர் ஸ்டாலின் பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாடி வருகிறார்கள்.
பிரதமர் மோடி அவரது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், “தமிழக முதல்வர்
மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட, ஆரோக்கியமான வாழ்வை வாழ வாழ்த்துகள்”
எனப் பதிவிட்டுள்ளார். அதேபோல் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, ‘நல்ல உடல் நலத்துடன்
நீண்ட ஆயுளுடன் மக்கள் பணி தொடர இறைவனை வேண்டுகிறேன்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று தனது பிறந்தநாளையொட்டி மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருடன்
கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர், அண்ணா, கருணாநிதி, பெரியார் நினைவிடங்களுக்குச்
சென்று மரியாதை செலுத்தினார்.
அதன்பின் கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்று, கருணாநிதி உருவப்படத்துக்கு
மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். அதன்பின், தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெறுகிறார்.
அதைத்தொடர்ந்து, சிஐடி காலனியில் உள்ள கருணாநிதி இல்லத்துக்கு செல்லும் முதல்வர், அங்கு
கருணாநிதி படத்துக்கு மரியாதை செலுத்திவிட்டு, ராசாத்தி அம்மாளிடம் வாழ்த்து பெறுகிறார்.
பின்னர், சித்தரஞ்சன் சாலை இல்லத்தில் காலை உணவு முடித்துவிட்டு,
அண்ணா அறிவாலயம் செல்கிறார். அங்கு, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள்,
எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள், முக்கிய நிர்வாகிகள், தொண்டர்களிடம் வாழ்த்து பெறுகிறார்.
ஹேப்பி பர்த் டே சி.எம்.ஸ்டாலின் என்ற ஹேஸ்டேக்கை தி.மு.க.வினர் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.