Share via:
எதிர்க் கட்சியாக
இருந்தபோதும், பதவிக்கு வந்து மூன்று ஆண்டுகள் முடிந்த பிறகும் கருணாநிதி நினைவு நாளில்
இப்படியொரு அமைதிப் பேரணியை மு.க.ஸ்டாலின் நடத்தியதே இல்லை. இந்த ஆண்டு திடீரென ஏற்பாடு
செய்யப்பட்டது ஏன் என்பதற்குப் பதில் கிடைத்திருக்கிறது.
சென்னை அண்ணாசாலை,
ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்திருக்கும் கருணாநிதி சிலையில் இருந்து காமராஜர் சாலையில்
அமைந்துள்ள கலைஞர் நினைவிடம் வரை கிட்டத்தட்ட 3 கி.மீ. நடந்தே சென்றுள்ளார் ஸ்டாலின்.
இதன் மூலம் அவருடைய உடல்நிலை பக்கா ஃபிட் என்பதை எதிர்க்கட்சிகளுக்குக் காட்டியிருக்கிறார்.
சமீபத்தில் முதல்வருக்கு
உடல்நிலை சரியில்லை, கையில் நடுக்கத்தை மறைக்கவே பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டுக்
கொள்கிறார், வேறு தலைவரை மாற்ற வேண்டும் என்று பேசினார். அதேபோல், மருத்துவம் செய்துகொள்வதற்காகவே
அமெரிக்கா செல்கிறார் என்றும் கூறப்பட்டது. இந்த இரண்டுக்கும் பதில் கூறும் வகையில்
இந்த நடைப்பயணம் அமைந்திருக்கிறது.
இதைவிட, கனிமொழிக்கும்
உதயநிதிக்கும் இடையில் மனஸ்தாபம் நிகழ்வதாகவும் ஒரு பேச்சு நிலவுகிறது. இதுவும் இந்த
அமைதிப் பேரணியில் உடைக்கப்பட்டுள்ளது. தனக்கு அருகில் கனிமொழியை வைத்துக்கொண்டு நடந்திருக்கிறார்
ஸ்டாலின்.
முதல்வரின் அமைதிப்
பேரணி கட்சி ரீதியாகவும் தங்கள் பலத்தைக் கூட்டணிக் கட்சியினரிடம் காட்டியிருக்கிறது.
ஆகவே, அடுத்த 2026 தேர்தலுக்கு தி.மு.க. இப்போதே தயாராகிவிட்டது என்பது தான் அந்த நிலைப்பாடு.