Share via:
நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் திடீர் மாற்றம்
செய்யப்பட்டு, அவரது மருமகள் செளமியா அன்புமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட விவகாரத்தில்
வன்னியர்கள் கடும் ஆவேசத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
நாடாளுமன்றத் தேர்தலில் முதலில் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி
அமைந்ததாக தகவல் வெளியான நிலையில், திடீரென பா.ஜ.க.வுடன் சேர்ந்து நிர்வாகிகளுக்கு
பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தார் ராமதாஸ்.
பா.ம.க.வுக்கு 10 தொகுதிக பாஜகள் ஒதுக்கப்பட்ட நிலையில், 9 தொகுதிகளுக்கான
வேட்பாளர் பட்டியலை ராமதாஸ் வெளியிட்டார். அதன்படி, திண்டுக்கல், அரக்கோணம், ஆரணி,
கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, தருமபுரி, சேலம், விழுப்பும் ஆகிய தொகுதிகளுக்கு
வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம் தர்மபுரி வேட்பாளராக
அறிவிக்கப்பட்டு இருந்தது. அறிவிப்பு வெளியான
சில மணி நேரங்களில் தர்மபுரி வேட்பாளராக செளமியா அன்புமணி நிறுத்தப்படுவதாக அறிவிப்பு
வெளியானது.
வன்னியர் சங்கம் பாட்டாளி மக்கள் கட்சியாக மாறியபோது டாக்டர் ராமதாஸ்,
‘நானோ என் குடும்பத்தாரோ பதவிக்கு வந்தால் என்னை நடுத்தெருவில் நிற்கவைத்து சவுக்கால் அடியுங்கள்..’ என்று கூறியிருந்தார். ஏற்கெனவே அன்புமணி மத்திய அமைச்சர் வரையிலும் பதவி அனுபவித்துவிட்டார்.
இந்த நிலையில் அவரது மனைவி செளமியாவும் களத்துக்கு வந்துவிட்டார்.
குடும்பக் கட்சி அரசியலை பிரதமர் நரேந்திரமோடி விமர்சனம் செய்துவரும் நிலையில், அவருக்குப் பதிலடி கொடுப்பது போன்று தனது மருமகளை நிறுத்தியிருக்கிறார் ராமதாஸ்.
தேர்தல் பிரசாரத்துக்கு ராமதாஸ் வரும்போது யாரும் சவுக்கால் அடித்துவிடாதீர்கள்
என்று வன்னியர் சங்கத்தினர் கோபம் காட்டிவருகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் திடீர் மாற்றம்
செய்யப்பட்டு, அவரது மருமகள் செளமியா அன்புமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட விவகாரத்தில்
வன்னியர்கள் கடும் ஆவேசத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
நாடாளுமன்றத் தேர்தலில் முதலில் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி
அமைந்ததாக தகவல் வெளியான நிலையில், திடீரென பா.ஜ.க.வுடன் சேர்ந்து நிர்வாகிகளுக்கு
பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தார் ராமதாஸ்.
பா.ம.க.வுக்கு 10 தொகுதிக பாஜகள் ஒதுக்கப்பட்ட நிலையில், 9 தொகுதிகளுக்கான
வேட்பாளர் பட்டியலை ராமதாஸ் வெளியிட்டார். அதன்படி, திண்டுக்கல், அரக்கோணம், ஆரணி,
கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, தருமபுரி, சேலம், விழுப்பும் ஆகிய தொகுதிகளுக்கு
வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம் தர்மபுரி வேட்பாளராக
அறிவிக்கப்பட்டு இருந்தது. அறிவிப்பு வெளியான
சில மணி நேரங்களில் தர்மபுரி வேட்பாளராக செளமியா அன்புமணி நிறுத்தப்படுவதாக அறிவிப்பு
வெளியானது.
வன்னியர் சங்கம் பாட்டாளி மக்கள் கட்சியாக மாறியபோது டாக்டர் ராமதாஸ்,
‘நானோ என் குடும்பத்தாரோ பதவிக்கு வந்தால் என்னை நடுத்தெருவில் நிற்கவைத்து
அடியுங்கள்..’ என்று கூறியிருந்தார். ஏற்கெனவே அன்புமணி மத்திய அமைச்சர் வரையிலும்
பதவி அனுபவித்துவிட்டார்.
இந்த நிலையில் அவரது மனைவி செளமியாவும் களத்துக்கு வந்துவிட்டார்.
குடும்பக் கட்சி அரசியலை பிரதமர் நரேந்திரமோடி விமர்சனம் செய்துவரும் நிலையில், அவருக்குப்
பதிலடி கொடுப்பது போன்று தனது மருமகளை நிறுத்தியிருக்கிறார் ராமதாஸ்.
தேர்தல் பிரசாரத்துக்கு ராமதாஸ் வரும்போது யாரும் செருப்பால் அடித்துவிடாதீர்கள்