Share via:
கிளாம்பாக்கத்தில் புதியதாக அமைய உள்ள ரெயில் நிலையத்திற்கான ரூ.20 கோடி மதிப்பிலான டெண்டரை தெற்கு ரெயில்வே டெண்டர் கோரியுள்ளது.
தாம்பரத்தை அடுத்துள்ள கிளாம்பாக்கத்தில் தென் மாவட்டங்களுக்கான பேருந்து சேவைக்கான புதிய பேருந்து நிலையம் முழுவீச்சில் அமைக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் மிகவும் பரபரப்பாக உள்ள கிளாம்பாக்கத்தில் பயணிகளின் வசதிக்காக புதிய ரெயில் நிலையம் அமைக்கும் திட்டத்தையும் அரசு முன்னெடுத்துள்ளது.
அதன்படி தாம்பரம்& செங்கல்பட்டு வழித்தடத்தில் பேருந்து நிலையத்திற்கு எதிரே புதிய ரெயில் நிலையம் அமைய உள்ளது.
இந்நிலையில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம் அமைப்பதற்கு ரெயில் ரெயில்வே டெண்டர் கோரியுள்ளது. புறநகர் ரெயில்கள் நின்று செல்லும் வகையில் அமைய உள்ள இந்த புதிய ரெயில் நிலையத்தில் 3 நடைமேடைகளுடன் கூடிய ரெயில் நிலையம் பயணிகளை பெரிதும் கவரும்.
மேலும் கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் ஓராண்டிற்குள் முடித்துவிட தெற்கு ரெயில்வே திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.
