Share via:
தர்மபுரி நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியும் ஜெயித்துவிடுவார்
என்று எதிர்பார்க்கப்பட்ட செளமியா அன்புமணி தோல்வி அடைந்துவிட்டார். அந்த தோல்வி அனுதாபத்தை
வெற்றியாக மாற்றுவதற்கு ராமதாஸும் அன்புமணியும் அடுத்த திட்டம் தீட்டியிருக்கிறார்கள்.
ஏற்கெனவே 2016ம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடந்த சமயத்தில்
அன்புமணி இங்கே நின்று தோற்றுப் போயிருக்கிறார். இங்கு பா.ம.க.வுக்கு குறிப்பிட்ட சதவிகிதம்
வாக்குகள் இருந்தாலும் அ.தி.மு.க.வுக்குத் தான் அதிகம் உள்ளது. ஆகவே செளமியாவுக்கு
எடப்பாடி பழனிசாமிக்கு தூது போக இருக்கிறார்களாம்.
இந்த இடைத் தேர்தலை எடப்பாடி பழனிசாமி புறக்கணிப்பு செய்ய வேண்டும்
என்று கோரிக்கை வைக்கப் போகிறார்களாம். அ.தி.மு.க.வும் பா.ம.க.வும் மீண்டும் தனித்தனியே
நின்றால் வாக்குகள் பிரிந்து தி.மு.க. வெற்றி அடைந்துவிடும். ஆகவே, அ.தி.முக. புறக்கணித்துவிட்டால்
வாக்குகள் ஒன்றுசேர்ந்து மிக எளிதாக தி.மு.க.வை வீழ்த்தி விடலாம் என்று கணக்குப் போடுகிறார்கள்.
அப்படி அ.தி.மு.க. இந்த தேர்தலை செளமியா அன்புமணிக்காக விட்டுக்கொடுத்தால்,
அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு கைமாறு செய்கிறோம் என்று வேண்டுகோள்
விடுக்கப்பட்டுள்ளதாம்.
எடப்பாடி பழனிசாமியும் சி.வி.சண்முகமும் என்ன முடிவு எடுப்பார்கள்
என்று பார்க்கலாம்.