Share via:
எடப்பாடி பழனிசாமிக்கும்
அண்ணாமலைக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்துவிட்டது. கூவத்தூரில் என்னவெல்லாம்
நடந்தது என்று தெரியாமா? பதவியை ஏலத்தில் எடுத்து தவழ்ந்து சென்று காலில் விழுந்த கதை
தெரியும் என்று பேசியதற்கு தமிழகம் முழுக்க கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்த பேச்சுக்கு
மாஜிக்கள், ‘’யார் காலிலும் விழுந்து பதவிக்கு வரவேண்டிய அவசியம் அதிமுகவில் இல்லை.
கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒன்றுகூடி எடப்பாடி பழனிசாமி அவர்களை முதல்வராக
தேர்ந்தெடுத்தோம். பாஜக மாதிரி மற்ற கட்சி எம்.எல்.ஏக்களை நாங்கள் விலைக்கு வாங்கவில்லை,
வடமாநிலங்களில் மலிவான அரசியல் செய்து பேரம்பேசும் கட்சியைச் சேர்ந்த தற்குறி அண்ணாமலைக்கு
20 ஆயிரம் புத்தகம் படித்தும் அறிவில்லை’’ என்று பதிலடி கொடுத்துவருகிறார்கள்.
எடப்பாடியின் கூட்டணிக்
கட்சியான பிரேமலதா இந்த விஷயத்தில் அமைதி காத்துவரும் நிலையில் நாம் தமிழர் கட்சியின்
சீமான், ‘’தமிழகத்திலேயே புத்திசாலி முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அது தற்குறி அண்ணாமலைக்குத்
தெரியாது’’ என்று போட்டு வெளுத்திருக்கிறார். இதையடுத்து அவரது தம்பிகள் அத்தனை பேரும்
அண்ணாமலைக்கு எதிராக களமாடி வருகிறார்கள்.
அ.தி.மு.க.வினர்
தமிழகத்தின் பல இடங்களில் அண்ணாமலையின் உருவப்படத்துக்கு செருப்படி கொடுத்து எரித்து
வருகிறார்கள். அண்ணாமலைக்கு கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்துவதற்கும் தயாராகிவருகிறார்கள்.
மோடிக்கு பிரசாரம் செய்ய முடியாதுன்னு கெத்து காட்டியவர் எங்க தலைவருடா என்று அ.தி.மு.க.வினர்
தொடர்ந்து கடும் விமர்சனம் செய்துவருகிறார்கள்.
இத்தனை ஏழரையை இழுத்துவிட்டு
அண்ணாமலை திடீரென லண்டனுக்குப் போய்விட்டால் கட்சியின் நிலை என்னாகும் என்று சீனியர்
புள்ளிகள் அதிர்ச்சி அடைந்து நிற்கிறார்கள். மேலிட பா.ஜ.க. இன்னமும் அண்ணாமலையை வேடிக்கை
பார்ப்பது தான் ஆச்சர்யம். இந்த நேரத்தில் அ.தி.மு.க.வின் மகளிர் அணி முழு வேகத்தில்
களத்தில் இறங்க காத்திருக்கிறதாம்.