Share via:
கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில்
நடிகர் கமல்ஹாசனுக்கு மிகவும் கசப்பான நிகழ்வுகள் நடந்தேறின. அதனால், இந்த ஆண்டு அவர்
பிக்பாஸ் தொகுத்து வழங்குவதில் இருந்து வெளியேறி இருக்கிறார்.
இந்த நிலையில் அடுத்தவர்
யார் என்று பெரிய குடுமிப்பிடி சண்டையே நடந்துவருகிறது. ஏனென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சி
தொகுத்து வழங்குவதற்கு 100 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.
கடந்த சீசனில் சிம்பு
தலை காட்டியிருந்தார். அதனால், அவர் நடத்துவார் என்று சொல்லப்பட்டு வந்த நேரத்தில்,
கமல்ஹாசன் சாய்ஸ் சிவகார்த்திகேயன் என்று சொல்லப்படுகிறது. அவருக்கு ஏற்கெனவே பல நிகழ்ச்சிகள்
தொகுத்து வழங்கிய அனுபவம் இருப்பதால் அவருக்குக் கொடுக்க வேண்டும் என்று பரிந்துரை
செய்திருக்கிறார்.
அதேநேரம், தன்னுடைய
இமேஜை உயர்த்திக்கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று நடிகர் சூர்யாவும் முயற்சி
செய்துவருகிறார். அவர் ஏற்கெனவே கோடீஸ்வரன் நிகழ்ச்சி வழங்கியிருப்பதால் முயற்சி செய்கிறார்.
சிம்புவும் முயற்சி செய்கிறார்.
இதற்கு இடையில் விஜய்
சேதுபதியை பங்கேற்கச் செய்வதற்கும் சிலர் முயற்சி செய்துவருகிறார்கள். ஒரே ஒரு தொகுப்பாளருக்குத்
தான் எத்தனை போட்டி.