Share via:

விஜய் நாளை நடத்த இருக்கும் பொதுக்குழுக் கூட்ட ஆயத்தப் பணிகள்
விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் நாளை முக்கியமான ஒரு போராட்ட அறிவிப்பு வெளியிடுவார்
என்று சொல்லப்படும் நிலையில், விஜய்க்குப் போட்டியாக சிவகார்த்திகேயனை முன்னிறுத்தும்
உதயநிதியின் அரசியல் படு விவகாரமாகிறது.
சினிமாவில் தன்னுடைய இடத்தை சிவகார்த்திகேயனிடம் விஜய் ஒப்படைப்பது
போன்று காட்சி அமைத்ததில் இருந்து அவரது ரசிகர்கள் சிவகார்த்திகேயனை கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில் விஜய் கடைசி படத்துடன் சிவகார்த்திகேயன் படத்தை மோத வைக்கிறார் உதயநிதி.
தீபாவளிக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் கடைசி
படமான ஜனநாயகன் சமீபத்தில் 2026 பொங்கலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து
அடுத்த சில நாட்களில் சிவகார்த்திகேயன் நடக்கும் பராசக்தி பொங்கலுக்கு வெளியாகும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் கடைசிப்படம் என்பதால் அரசியல் கலந்த கதையாக ஜனநாயகன்
இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பராசக்தி முழுக்க முழுக்க அரசியல் ரீதியில்
தி.மு.க.வின் சாதனைப்படமாக இருக்கும் என்று தெரிகிறது. இந்த படத்தை டான் பிக்சர்ஸ்
தயாரித்தாலும்.. அதை வெளியிடப்போவது ரெட் ஜெயண்ட் நிறுவனம். ஆகவே, திமுகவிற்கு எதிராக
அரசியல் செய்யும் விஜய்க்கு அவரது நண்பரான சிவகார்த்திகேயனையே எதிரியாக நிறுத்துகிறார்
உதயநிதி.
இப்போது விஜய்க்கும் சிவகார்த்திகேயனுக்கும் போட்டி என்பது தெரிந்து
விஜய் ரசிகர்கள் அதிர்ந்து நிற்கிறார்கள். அஜித்தைப் போலவே சிவகார்த்திகேயனுடன் மோதுவதா
என்று யோசிக்கிறார்கள்.