News

தமிழ்நாட்டை 8 பேர் கையில் குடுத்துட்டாங்க. சீனியர்கள் இல்லாமல் ஸ்டாலின் தேர்தல் பிளான்

Follow Us

சீமானைப் பற்றி திமுகவின் சர்ச்சைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். அதாவது, ‘சீமான் பொம்பளை மேட்டரில் எல்லோரும் கிண்டலடிக்கிறார்கள். சீமானை சாமான்னுதான் கூப்பிடுறாங்க. அவனுக்கென்ன தேர்தல்ல வேட்பாளர்களை வரிசையா நிக்க வைச்சுட்டு ஜம்முன்னு ஏசி கார்ல போயிடுவான்.

அவங்க கையில இருக்கிற காசை எல்லாம் போட்டு செலவழிச்சு பிச்சைக்காரனா ரோட்டுல நிப்பாங்க, இவன் திரும்பவும் அடுத்த தேர்தலுக்கு ஆளை பிடிப்பான். இவனெல்லாம் ஒரு ஆளுன்னு ஓட்டுப் போட்றாதீங்க’ என்று ஒருமையில் கடுமையாக வன்முறை கக்கியிருக்கிறார்.

இவருக்கு நாம் தமிழர் கடுமையான பதிலடி கொடுத்துவருகிறார்கள். இந்த நிலையில் கருணாநிதிக்கு சிலையும் பேரும் வைக்கவேண்டும் என்பதையே வேலையாகக் கொண்டிருக்கும் ஸ்டாலினுக்கு எச்சரிக்கை செய்திருக்கிறார் சீமான்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் இன்றைய அறிக்கையில், ‘’திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பெயரில் அமைந்திருந்த பேருந்து நிலையம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையில் கண்ணியமிக்க ஐயா காயிதே மில்லத் அவர்களின் பெயரில் அமைந்திருந்த பேருந்து நிலைய அங்காடி ஆகியவைச் சீரமைப்புச் செய்து, புதிதாகத் திறக்கப்படவிருக்கும் நிலையில், அவற்றிற்கு கருணாநிதியின் பெயரைச் சூட்ட திமுக அரசு முடிவெடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

 திமுக ஆட்சிக்கு வந்தது முதல் கடந்த 4 ஆண்டுகளாகப் புதிதாகத் திறக்கும் மதுக்கடைகளைத் தவிர, மற்ற அனைத்து முதன்மை அரசு கட்டிடங்களுக்கும் முன்னாள் முதல்வர் ஐயா கருணாநிதி அவர்களின் பெயரைச் சூட்டுவதே வாடிக்கையாக வைத்துள்ளது. அது மட்டும் போதாதென்று, தமிழ்நாட்டில் தமிழ்ப்பெரும் தலைவர்களுக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ள அடையாளங்களையும் அழித்தொழிக்கும் வகையில், பராமரிப்பு என்ற பெயரில் கட்டிடங்களில் ஏற்கனவே இருக்கும் தலைவர்களின் பெயரை மாற்றி, ஐயா கருணாநிதி பெயரில் திறப்பதற்குப் பெயர்தான் திராவிட மாடலா?

கடந்த 50 ஆண்டுகளாகத் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழத்தலைவர்களின் புகழை மூடி மறைத்து இருட்டடிப்புச் செய்து வருகின்றன என்பது வேதனைக்குரியதாகும். இந்நிலையில், தமிழ்த் தலைவர்களின் பெயரில் ஏற்கனவே உள்ள சிறுசிறு அடையாளங்களையும் அழித்தொழிக்க திமுக அரசு முயல்வது ஏற்க முடியாத கொடுமையாகும். ஆகவே, மன்னார்குடி பெருந்தலைவர் காமராசர் பேருந்து நிலையம் மற்றும் ஆடுதுறை காயிதே மில்லத் பேருந்து நிலைய அங்காடி ஆகியவற்றின் பெயரை மாற்றும் முடிவை திமுக அரசு கைவிடவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம்’’ என்று எச்சரித்துள்ளார்.

சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு பதிலடி கொடுப்பதற்கு நாம் தமிழர் கட்சியினர் தனி அசைன்மென்ட் எடுத்திருக்கிறார்களாம், என்ன நடக்கிறது பார்க்கலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link