News

மோடியை வரவேற்பாரா செங்கோட்டையன்..? எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி

Follow Us

உலகின் பிரபலமான தொழிலதிபரும் எக்ஸ் தள உரிமையாளருமான எலான் மஸ்க், தன்னுடைய கருத்துகளை வெளிப்படையாக சொல்ல கூடியவர். அவர் இரு நாட்களுக்கு முன்பு சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் விரைவில் அழிந்து விடும் என்று  சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்தினார் .

 

இதை தொடர்ந்து சிங்கப்பூரில் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்திருப்பதாக வெளியானத் தகவலை மேற்கோள்காட்டிய எலான் மஸ்க் மரியோ நாவ்பால் என்பவர், சிங்கப்பூரின் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்திருப்பது தொடர்பான தகவலை வெளியிட்டிருந்த எக்ஸ் தள பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக எலான் மஸ்க் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் விரைவில் அழியப்போகின்றன என பதிவிட்டிருந்தார் .

 

இந்நிலையில் எலான் மஸ்க் கூறியிருக்கும் இந்த தகவல், பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இது தொடர்பாக மரியோ நாவ்பால் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் .

 

கடந்த பல பத்தாண்டுகளில் சிங்கப்பூரின் குழந்தை பிறப்பு விகிதமானது பெரிய அளவில் சரிந்துவந்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு சிங்கப்பூரின் குழந்தை பிறப்பு விகிதமானது வரலாற்றில் எங்கும் இல்லாத அளவுக்கு 0.97 ஆக குறைந்துள்ளது. இது 1.0க்கும் குறைவாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்திருப்பது முதல் முறையாகும். அதாவது, ஒரு பெண் ஒன்றுக்கும் குறைவான குழந்தைகளையே பெற்றுக்கொள்கிறார்கள் என்றால், பலரும் ஒரு குழந்தை கூட பெறுவதில்லை என்பதாகிறது.

 

இதனால் சிங்கப்பூரில் வயதானவர்கள் மிக அதிகம் இருப்பர், தொழிலாளர்கள் வீதம் குறைவாக இருக்கும், மனித வளம் குறைந்துவிடும். தொழிற்சாலை முதல் உணவு வினியோகம் அனைத்தும் பெரிதும் பாதிக்கப்படும் என்று மரியோ நாவ்பால் பதிவிட்டிருந்தார். ஒரு பெண் தனது முதல் குழந்தையை பெறும் வயதான 25 -34 வரை பெரும்பாலும் திருமணமாகாமல்  இருப்பதால் ,20 வயதில் குழந்தை பெறும் பெண்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது .  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link