Share via:
33வது ஒலிம்பிக் போட்டி பாரிசில் நடைபெற்று வருகிறது. இப்போட்டித் தொடரில் இந்திய மல்யுத்தப் போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனை வினேஷ் போகாட் தனக்கு நடந்த அநீதியால் அதிருப்தியடைந்து ஓய்வை அறிவித்தார்.
பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகாட் தன்னை எதிர்த்து போட்டியிட்ட கியூபா நாட்டு வீராங்கனையை 5க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோற்கடித்தார். கடந்த 8 மணி நேரத்தில் 3 சர்வதேச வீராங்கனைகளை வெற்றி கண்ட வினேஷ் போகாத் அமெரிக்க வீராங்கனை சாரா ஹில்டெப்ரண்ட்டை எதிர்கொள்ள தயாரானார்.
அதன்படி அவர் ஏற்கனவே வெள்ளிப்பதக்கத்தை தன்வசம் வைத்திருந்த நிலையில் போட்டியின் போது 100 கிராம் எடை கூடுதலாக இருந்தார் என்று குற்றம்சாட்டி வினேஷ் போகாட்டை தகுதிநீக்கம் செய்தனர். இதை எதிர்த்து இந்திய விளையாட்டு சம்மேளனம், ஒலிம்பிக் சம்மேளனத்திடம் முறையிட்டது. விதிகள் என்பது அனைத்து வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கும் பொதுவானது என்று அந்த கோரிக்கையை நிராகரித்தது. இதைத்தொடர்ந்து பாலியல் தொந்தரவால் மல்யுத்தத்தைவிட்டு விலகியல முன்னாள் வீராங்கனை சாக்ஷிமாலிக் தனது வேதனையை பகிர்ந்து கொண்டார்.
இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், வினேஷ் போகாத் இறுதிப்போட்டிக்கு முன்னரே எடையின் அடிப்படையில் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஒவ்வொரு விளையாட்டுக்கென்று தனித்தனி தகுதிகள் உள்ளன. அந்த விதிகள் சூழலில் வைத்த பார்க்க வேண்டும். ஆனால் அவற்றை சில சமயங்களில் மறுபரிசீலனை செய்யலாம்.
ஊக்க மருந்து உட்கொண்டிருந்தால் ஒரு வீரரை தகுதிநீக்கம் செய்வது நியாயமாக இருக்கும். அப்படியானால் எந்த பதக்கமும் வழங்கப்படாமல், கடைசி இடத்ததை பிடித்திருப்ப நியாயமானதாகவே இருக்கும்.
ஆனால் மல்யுத்த வீராங்கனை வினேஷ் தனது எதிரிகளை நியாயமான முறையில் தோற்கடித்து முதல் இரண்டு இடங்களை எட்டினார். அவர் நிச்சயமாக வெள்ளிப்பதக்கத்திற்கு தகுதியானவர். விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக இந்தியர்களாகிய நாம் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறோம். வினேஷ் போகாட்டிற்கு உரிய நியாயமும், அங்கீகாரமும் நிச்சயம் கிடைக்கும் என்று நம்புவோம். பிரார்த்தனை செய்வோம் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.