கொரோனா காலத்திற்குப் பிறகு இளவயதில் மாரடைப்பு போன்ற ரத்த நோய்களால் மரணம் அடைபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி கோவிஷீல்டு போட்டவர்களுக்கே இந்த பாதிப்பு அதிகம் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், மத்திய அரசு அதனை மறுத்துவந்தது.

இந்த நிலையில், கோவிஷீல்டு கரோனா தடுப்பூசியால் அரிதாக சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதனை உருவாக்கிய ஆஸ்ட்ரஜெனக்கா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக பிரிட்டன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கோவிஷீல்டு பாதிப்புகள் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஸ்ட்ராஜெனக்கா நிறுவனம் சமர்ப்பித்த ஆவணத்தில், கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாக ரத்தம் உறைதல், ரத்தத் தட்டுக்களின் (பிளேட்லட்) அளவு குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் மட்டும் ஆஸ்ட்ராஜெனக்கா நிறுவனம் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதன் கோவிஷீல்டு தடுப்பூசியால் உயிரிழப்புகள், தீவிர பாதிப்புகள் ஏற்பட்டதாக 51 வழக்குகள் விசாரணையில் உள்ளன. 100 மில்லியன் பவுண்ட் அளவில் நிவாரணம் கோரி இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த வழக்கின் முதல் புகார்தாரரான் ஜேமி ஸ்காட் தரப்பில், “கடந்த ஏப்ரல் 2021 ஆம் ஆண்டு ஜேமிக்கு முதன்முதலில் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் மூளையில் ரத்தம் உறைந்து நிரந்தர பாதிப்பு ஏற்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆஸ்ட்ராஜெனக்கா நிறுவனம் இதனை மறுத்து வாதிட்டு வந்தாலும் கூட நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஓர் ஆவணத்தில் மட்டும் கோவிஷீல்டு அரிதாக ரத்த உறைதல், ரத்த தட்டுக்கள் குறைதலை ( TTS – Thrombosis with Thrombocytopenia Syndrome) பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளது.

ஆஸ்ட்ராஜெனக்காவின் இந்த ஒப்புதலால் கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிக்கப்பட்டதாகக் கூறும் பலர் மற்றும் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பெரிய அளவில் இழப்பீடு வழங்கப்படுவதற்கான சூழல் உருவாகியுள்ளது. இந்தியாவில் இந்த விவகாரம் படும் அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது. கோவிஷீல்டு போட்டுக்கொண்டவர்கள் முறைப்படி மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமா என்று மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுவருகிறார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link