Share via:

பள்ளிகளில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களை கட்டாய தேர்ச்சி செய்யும் முறையை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிகளில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களை தேர்வில் தோல்வியுற்றவர்களாக அறிவிக்கக் கூடாது என்கிற கொள்கை தற்போது நடைமுறையில் உள்ளது. இதனால் அனைத்து பள்ளிகளிலும் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில் பயின்று வரும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அடுத்த வகுப்புகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் மத்திய கல்வித்துறை செயலாளர் சஞ்சய் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களை பெயில் ஆக்கக் கூடாது என்கிற கொள்கை ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி இனி வரும் காலங்களில் தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு 2 மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டு மறுதேர்வு வைக்கப்படும். அதில் தேர்ச்சி பெற்ற பிறகு அடுத்த வகுப்பில் அவர்கள் அமர்த்தப்படுவார்கள். இது மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட முடிவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.