Share via:

சென்னை மாவட்டத்தைப் பிரித்துக்கொடுத்தால் மட்டுமே வெற்றி எளிதாக
இருக்கும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி
ஸ்டாலின் எடுத்துவரும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டுவரும் அமைச்சர் சேகர் பாபு,
இதை வெளிப்படையாகவே, ‘விடாப்பிடி’ துணை முதல்வர் என்று கிண்டல் அடித்திருப்பது சென்னை
தி.மு.க.வினரை அதிரவைத்துள்ளது.
இது குறித்து பேசும் தி.மு.க.வினர், ‘’சென்னை ஒருங்கிணைந்த மாவட்டமாக
இருந்த போது இளம்பரிதி, நீல நாராயணன், ஆர்.டி.சீத்தாபதி, டி.ஆர்.பாலு ஆகியோர் மாவட்ட
செயலாளர்களாக இருந்திருக்கிறார்கள். அதன்பின் வடசென்னை,தென் சென்னை என்று இரண்டாக பிரிக்கப்பட்டு,
வடசென்னைக்கு பலராமனும், தென் சென்னைக்கு சைதை கிட்டும் மாவட்ட செயலாளர்களாக இருந்தனர்.
அதன்பின் 1999 ல் மூன்றாக பிரிக்கப்பட்டு வடசென்னைக்கு பலராமனும்,தென்
சென்னைக்கு சைதை கிட்டும், மத்திய சென்னைக்கு பரிதி இளம் வழுதியும் மாவட்ட செயலாளர்களாக
இருந்தனர். பரிதி இளம்வழுதி துணை பொதுச்செயலாளர் ஆனார். அதன்பின் தென்சென்னைக்கு ஜெ.அன்பழகன்,
வி.எஸ்.பாபு விலக்கப்பட்டு வட சென்னைக்கு ஆர்.டி.சேகரும், தென் சென்னைக்கு அன்பழகனும்
மாவட்ட செயலாளர் ஆனார்கள்.
அதன்பின் நான்காக பிரிக்கப்பட்டு கிழக்கு: சேகர் பாபு, மேற்கு:அன்பழகன்,
தெற்கு: மா.சுப்பிரமணியன், வடக்கு: சுதர்சனம் என்றும் அன்பழகன் மறைவுக்கு பிறகு சிற்றரசு
மேற்கு மாவட்ட பொறுப்பாளர் ஆனார்.
அதன்பின், 2020ல் சென்னை மாவட்டம் ஆறாக பிரிக்கப்பட்டது. கிழக்கு:
சேகர்பாபு, தெற்கு : மா.சுப்பிரமணியன், மேற்கு: சிற்றரசு, வடக்கு: இளைய அருணா, வடகிழக்கு:
சுதர்சனம், தென் மேற்கு மயிலை வேலு நியமிக்கப்பட்டனர். இவர்களில் சென்னை வடக்கு மாவட்ட
செயலாளர் இளைய அருணா நீக்கப்பட்டு, மாநில இளைஞரணி துணை செயலாளராக இருந்த ஆர்.டி.சேகர்
நியமிக்கப்பட்டார்.
சேகர் பாபு வசம் இருக்கும் சென்னை கிழக்கு மாவட்டத்தில் துறைமுகம்,
திரு.வி.க.நகர், எழும்பூர், குளத்தூர், வில்லிவாக்கம், அம்பத்தூர் என ஆறு தொகுதிகள்
உள்ளன. சேகர் பாபு மீது கட்சியினர் அதிருப்தி அதிகரிப்பதை அடுத்து, இதை இரண்டாகப் பிரிப்பதற்கு
உதயநிதி திட்டமிட்டு வருகிறார். ஆனால், இதை சேகர் பாபு வெளிப்படையாகவே எதிர்த்து வருகிறார்.
சமீபத்திய திருமண விழாவில் உதயநிதியை வரவேற்றுப் பேசிய சேகர் பாபு,
‘’விடாப்பிடி துணை முதல்வரே’’ என்று கிண்டலாகக் கூறியது கட்சியினரை அதிர வைத்துள்ளது.
என்னை மீறி மாவட்டச் செயலாளரை நியமனம் செய்ய முடியாது, ஆறு சட்டமன்ற தொகுதிக்கும் நான்
தான் ராஜா என் தொகுதியை குறைக்கவோ மாற்றவோ செய்ய முடியாது என்று தைரியமாகப் பேசுகிறார்.
இந்துக்கள் ஓட்டுக்கள் வாங்குவதற்கு சேகர் பாபு தேவை என்பதால்
அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தி.மு.க. தயாராக இல்லையாம். மாற்றுக் கட்சியில் இருந்து
வந்தவர் தி.மு.க.வினரை ஆட்டி வைக்கிறார்கள். இதுதன், இரும்புக்கரமா தலைவா என்று தி.மு.க.வினர்
கொதிக்கிறார்கள்.