Share via:
தி.மு.க. ஆட்சி மீது தொடர் விமர்சனம் வைத்துவரும் சவுக்கு சங்கர்
மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுவது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது.
ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்தால் அடுத்த வழக்கில் கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு
வருகிறது.
மதுரை நீதிமன்றத்தில் ஆஜராகாததால் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு
அவர்களுக்கு சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் 15 நாட்கள் கையெழுத்திட வேண்டும் என்ற
நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவு போட்டார் இந்த வழக்கு வராகி சம்பந்தப்பட்டது.
இதற்காகவே சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை சென்று மெனகெட்டு கைது செய்தார்கள்.
இந்த வழக்கில் ஜாமீன் கிடைத்த காரணத்தால் அவர் மீண்டும் வெளியே
வரக்கூடாது என்று அடுத்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நில அபகரிப்பு தடுப்பு பிரிவு விசாரிக்கும் ஒரு வழக்கு தொடர்பாக
கடந்த டிசம்பர் 5ஆம் தேதி சவுக்கு சங்கர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் அது தொடர்பாக
விசாரணைக்கு சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரி விசாரிப்பதற்காக சம்மன் அனுப்பினார். கடந்த
16ஆம் தேதி சவுக்கு சங்கர் விசாரணைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில்
ஆஜரானார்.
விசாரணையின் போது காவல்துறையைப் பற்றி அவதூறாகவும் மக்களுக்கு
அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தும் தனது சவுக்கு மீடியா
சேனலில் காவல்துறையை அவதூறு செய்யும் வகையில் வீடியோ வெளியிட்டதாக நில அபகரிப்பு பிரிவு
விசாரணை அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார் அந்த அடிப்படையில் காவல்துறை மற்றும் அரசுக்கு
அவதூறு பரப்பும் வகையில் செயல்பட்ட சவுக்கு சங்கர் அவரது யுடியூப் சேனல் சவுக்கு மீடியா
மற்றும் தொகுப்பாளர்கள் மாலதி மற்றும் லியோ ஆகிய நான்கு பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில்
நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சவுக்கு சங்கரின் ஆதரவாளர்கள் அனைவரையும் குறி வைத்துத் தாக்கும்
நடவடிக்கை தொடர்ந்து வருவதைக் கண்டு அவரது ஆதரவாளர்கள் அதிர்ந்து நிற்கிறார்கள். தமிழக
திராவிட ஆட்சியில் பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் கிடையாதா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
இப்படி வழக்கு மேல் வழக்கு போடுவதைப் பார்த்தால் தைப் பொங்கலுக்கு அவரை வெளியே விடக்கூடாது
என்ற எண்ணத்திலே அரசு இருப்பதாகத் தெரிகிறது.