Share via:
நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது
மாநிலங்களவையில் பேசிய அமித்ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது
இப்போது FASHION ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால்,
சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்’ என்று பேசிய விவகாரம் பெரும்
சர்ச்சையாக வெடித்துள்ளது.
இந்த விவகாரத்தில்
அம்பேத்கர் மீது அமித் ஷா மற்றும் ஆர்.எஸ்.எஸ்.க்கு இருக்கும் வன்மம் வெளிப்பட்டுவிடது.
அம்பேத்கர் பெயரைச் சொன்னால் என்ன கிடைக்கும்,
கடவுள் பெயரைச் சொன்னால் சொர்க்கம் கிடைக்கும் என்கிறார். அம்பேத்கர் பெயர் சொன்னதால்
தான் எங்களுக்கு ,கடவுளின் பெயரால் சுமத்தப்பட்ட இழிவிலிருந்து விடுதலை கிடைத்தது.
அம்பேத்கரை அவமானம் செய்த அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில்
போர்க்குரல் எழுந்துள்ளது.
இது குறித்து போராட்டம்
நடத்துபவர்கள், ‘’என் வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது என்பது போன்ற
வழக்கமான விஷயங்களை சொல்லி தப்பித்துக் கொள்ள பார்க்காதீர்கள் அமித் ஷா! உங்களது உள்நோக்கம்
நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிந்து விட்டது’ என்று அம்பேத்கர் போட்டோவுடன் நாடாளுமன்றத்தை
முடக்கியுள்ளனர்.
ராகுல் காந்தி, பிரியங்கா
காந்தி உள்ளிட்டோர், ‘’புரட்சியாளர் அம்பேத்கரை இழிவாக பேசிய அமித்ஷா பதவியிலிருந்து
விலக வேண்டும்! “புல் புல் பறவை”மற்றும் “மன்னிப்பு புகழ்” சாவர்க்கர்
பேரன் அமித்ஷா அவர்களே கடவுள், சொர்க்கம், நரகம் பற்றி புரட்சியாளர் பேரன்களுக்கு நம்பிக்கை
இல்லை’’ என்று கொதிக்கிறார்கள்.
ஒரே நாடு ஒரே தேர்தலை
நிறைவேற்ற முடியவில்லை என்றால் அம்பேத்கர் பற்றியும் பேச முடியவில்லை. அமித் ஷா