Share via:
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உதயநிதி பற்றி ஒரு வில்லங்கமான
ஒரு கேள்வி கேட்டார். அந்த கேள்விக்கு எதிர்வினையாக இன்று செக்ஸ் வீடியோ அண்ணாமலை என்ற
ஹேஸ்டேக் எக்ஸ் தளத்தில் தி.மு.க. ஐ.டி. விங் டிரெண்டிங் ஆக்கியிருக்கிறது.
வெள்ளப்பாதிப்பு அதிகமாக இருக்கிறது என்றதுமே அமைச்சர் உதயநிதி
தென் தமிழகத்திற்கு வந்து இரவும் பகலுமாக மீட்பு நடவடிக்கை எடுத்துவருகிறார்.
லேட்டாக நெல்லை வெள்ள பாதிப்பை பார்வையிடப் போன அண்ணாமலை, ’உதயநிதிக்கு
என்ன அனுபவம் இருக்கிறது… ஏன் துரைமுருகன் மீட்பு பணிக்கு வரவில்லை’ என்றெல்லாம் ஏடாகூடமாக
கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் துரைமுருகன் உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் படுத்திருப்பது
எல்லோருக்குமே தெரிந்த விஷயம். இதைகூட அறியாமல் வந்தது மட்டுமின்றி உதயநிதிக்கு அனுபவம்
இல்லை என்று பேசியது தி.மு.க.வினருக்கு கோபத்தைக் கொடுத்துவிட்டது.
ஏனென்றால் இளைஞர் அணியில் இருந்து கட்சிப் பணிகளிலும் தேர்தல்
பிரசாரத்திலும் அண்ணாமலையைவிட நான்கு மடங்கு அனுபவத்துடன் இருக்கிறார். இதில் அண்ணாமலைக்கு
என்ன அனுபவம் இருக்கிறது என்பதை சொல்லும் வகையில் செக்ஸ் வீடியோ அண்ணாமலை என்பதை தி.மு.க..
ஐடி விங் டிரெண்ட் ஆக்கியுள்ளனர்.
பா.ஜ.க. மூத்த தலைவர் கே.டி.ராகவனை ஓரம் கட்டியதில் தொடங்கி
காயத்ரி ரகுராம், சூர்யா சிவா போன்ற பல்வேறு நேரங்களில் செக்ஸ் வீடியோவை அண்ணாமலை பயன்படுத்தியதாகச்
சொல்லி டிரெண்டிங் செய்துவருகிறார்கள்.
இதற்கு எப்படி பதிலடி கொடுப்பது என்று தெரியாமல் விழித்துவருகிறது
தமிழக பா.ஜக. டீம். ஒருவேளை உண்மையிலே செக்ஸ் வீடியோ வரப்போகிறதோ என்றும் குழம்பிவருகிறார்கள்.
அரசியல் எங்கேயோ போயிடுச்சே…