Share via:
பணியிடங்களில் உணவு மற்றும் தேநீர் இடைவெளிகளை உடலுறவுக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ரஷியா உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் ரஷியாவின் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதாவது ரஷியாவில் தற்போதுள்ள மக்கள் தொகை அப்படியே நிலைத்திருக்க வேண்டுமென்றால் ஒரு பெண்ணுக்கு 2.1 சதவீதம் என்ற அளவுக்கு குழந்தைகள் பிறக்க வேண்டும். ஆனால் அது தற்போது 1.5 சதவீதமாக குறைந்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் ஒரு லட்சத்திற்கும் குறைவாக குழந்தைகள் பிறந்துள்ளதாக அந்நாட்டின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இது 1999க்கு பிறகு இதுவரை இல்லாத அளவு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் நடப்பாண்டான 2024ன் முதல் பாதியில் 16 ஆயிரம் அளவுக்கு குறைவான குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நம்முடைய முன்னோர்கள் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்ற வரலாறு உள்ளது என்று அந்நாட்டு அதிபர் புதின் இதற்கு முன்னரே தெரிவித்துள்ள நிலையில் சர்ச்சையான வலியுறுத்தலை முன்வைத்துள்ளார்.
அதாவது ‘‘ரஷிய மக்களை பாதுகாப்பதே ரஷிய நாட்டின் மிக உயர்ந்த தேசிய முன்னுரிமையாக கருதப்படுகிறது. இருப்பினும் ரஷியாவின் தலைவிதி காரணத்தால் நம்மில் எத்தனை பேர் உயிருடன் இருப்போம் என்பதை பொறுத்தது. மேலும் இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியாக இருக்கும் என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்நாட்டில் உள்ள செல்யாபின்ஸ்க் பிராந்தியத்தில் 24 வயதுக்கு உட்பட்ட பெண்கள் குழந்தை பெற்றுக் கொண்டால் அவர்களின் முதல் குழந்தைக்கு 8,500 டாலர் வழங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதே போல் விவாகரத்துக்கும், கருத்தடைக்கும் தடையும் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.