Share via:

ஆளும் தி.மு.க.வுக்கு எதிராக தொடர்ந்து வீடியோவில் பேசிவரும் சவுக்கு
சங்கர் வீட்டில் இன்று துப்புரவுத் தொழிலாளர்கள் நுழைந்து தாக்குதல் செய்திருப்பதாக
ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
சவுக்கு சங்கர் வெளியிட்ட பதிவில், ‘’இன்று காலை 9.30 மணி முதல்,
துப்புறவு தொழிலாளிகள் என்று கூறிக் கொண்டு 50 பேர் கொண்ட கும்பல் நானும் என் தாயாரும்
குடியிருக்கும் வீட்டின் மீது சராமரியாக தாக்குதல் நடத்தி வருகிறது. நான் வெளியே கிளம்பிய
5 நிமிடத்தில் வந்த இந்த கும்பல், வீட்டின் கதவை உடைத்து, உள்ளே நுழைந்து, படுக்கையறை,
சமையலறை, சமையல் பொருட்கள் என அத்தனை பொருட்களின் மீதும் சாக்கடையையும் மலத்தையும்
கொட்டினர்.
என்ன நடந்தது என்று என் தாயாருக்கு போன் செய்தபோது அந்த போனை வாங்கி
வீடியோ காலில் வந்து கொலை மிரட்டல் விடுத்தனர். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக
தகவல் தெரிவித்தேன். ஒரே ஒரு உதவி ஆய்வாளரும் ஒரு காவலரும் மட்டும் வந்தனர். 9.30 மணி
முதல் இது வரை வரை போராட்டம் நடத்தியவர்கள் அந்த இடத்தை விட்டு அகலவில்லை. அந்த இடத்திற்கு
சென்ற ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். யாருடைய தூண்டுதலில் இந்தத்
தாக்குதல் நடைபெறுகிறது என்பதை சொல்ல வேண்டியதில்லை…’’ என்று கூறியிருக்கிறார்.
சமீபத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறித்து ஒரு பதிவு போட்டிருந்தார்.
இதையொட்டி தி.மு.க.வினர் தாக்குதல் தொடுத்திருப்பதாக சவுக்கு ஆதரவாளர்கள் கடும் கண்டனம்
தெரிவிக்கிறார்கள். அவர்கள் உண்மையாகவே தூய்மை பணியாளர்கள் தானா…. எதிர் கருத்து
உள்ளவர்கள் வீட்டில் தாக்குதல் நடத்தவேண்டும் என்றால் தமிழ் நாடு என்ன ஆவது.. காவல்
துறை இதை அனுமதிக்கிறதா என்பதற்கெல்லாம் உடனடியாக விடை தெரியவேண்டும்.