Share via:
நாடாளுமன்றத் தேர்தலில்
செந்தில் பாலாஜி தி.மு.க.வுக்கு பணியாற்றக்கூடாது என்பதற்காகவே அவரை பா.ஜ.க. சிறைக்கு
அனுப்பியதாகச் சொல்லப்பட்டது. அதே பாணியில் கொங்கு பகுதியில் அ.தி.மு.க. சட்டமன்றத்
தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்றால் செந்தில் பாலாஜி வெளியே இருக்கக்கூடாது என்று அவரை
சிறைக்கு அனுப்ப அடுத்த ஊழலை அ.தி.மு.க. கையில் எடுத்திருக்கிறது.
தமிழக மின் வாரியத்துக்கு
ட்ரான்ஸ்ஃபார்மர்கள் வாங்குவதில் பெரும் ஊழல் நடைபெற்று இருப்பதை அ.தி.முக. அம்பலப்படுத்துகிறது.
அதாவது,. 26,300 ட்ரான்ஸ்பார்மர்களை வாங்குவதற்கு விடப்பட்ட டெண்டரில், ஒரே விலைக்கு
அத்தனை நிறுவனங்களும் விண்ணப்பித்திருக்கிறார்கள். இப்படி ஒரு செட்டப் டெண்டர் நடத்தப்பட்டது
என்றும் இதன் மூலம் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு 397 கோடி ரூபாய் லாபம் ஏற்படுத்திக்
கொடுத்துள்ளார் செந்தில்பாலாஜி.
ஆகவே, செந்தில் பாலாஜி
மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு,
அதிமுக ஐடி விங் இணைச் செயலாளர் நிர்மல் குமார் புகார் அளித்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்
துறை வழக்கு பதிவு செய்யாவிட்டால், விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடுவதற்கு அ.தி.மு.க.
தயாராக உள்ளது. எப்படியும் தேர்தலுக்குள் அவரை சிறையில் அடைப்பதற்காக டாஸ்மாக் உள்ளிட்ட
மேலும் சில ஊழல்களையும் தோண்டி எடுக்கிறார்கள்.
செந்தில் பாலாஜிக்கு
கட்டம் கட்டி ஆட்டத்தைத் தொடங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. எதிர்பார்த்த பலன்
கிடைக்குமா என்று பார்க்கலாம்.