Share via:
சிறையில் இருந்து வெளியே வந்திருக்கும் செந்தில் பாலாஜியை தியாகி
என்று முதல்வர் ஸ்டாலின் பாராட்டி வரவேற்பு கொடுத்திருந்தார். இதையடுத்து அவருக்கு
கட்சியில் எக்கச்சக்க மரியாதையும் மதிப்பும் கிடைத்திருக்கிறது. இன்று செந்தில் பாலாஜியை
வரவேற்க வந்து நிற்கும் கூட்டத்தைக் கண்டு தி.மு.க. சீனியர்கள் அதிர்ந்து நிற்கிறார்கள்.
குறிப்பாக அமைச்சர் நேரு கடும் ஆத்திரத்தில் இருக்கிறாராம்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு
15 மாதங்களாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு, நிபந்தனைகளுடன்
ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த நிலையில், செந்தில் பாலாஜி சிறையில் இருந்து நேற்று மாலை
வெளியே வந்தார். பொன்முடி நேரடியாகச் சிறை வாசலுக்கே சென்று வரவேற்றார். சிறை வாசலில்
தி.மு.க.வினர் பெருமளவு கூடி பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.
இந்த கூட்டம் இன்று காலையில் பெருமளவு அதிகரித்துவருகிறது. இன்று
திமுக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
ஆகியோர் செந்தில் பாலாஜியை சந்தித்து வரவேற்பு அளித்தனர். இதை பார்த்த மற்ற அமைச்சர்களும்
செந்தில் பாலாஜியிடம் அட்டனன்ஸ் போடுவதற்கு ஓடிப் போகிறார்கள்.
செந்தில்பாலாஜியுடன் இதுவரை மோதல் போக்கில் இருந்த கரூர் எம்.பி.
ஜோதிமணி நேரில் பேசி கண்ணீர் சிந்தி சரண்டர் ஆகியிருக்கிறார். கொங்கு பகுதியில் இருந்தும்
தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்தும் தலைவர்களும் தொண்டர்களும் வரிசை வரிசையாக வந்து
மாலை போட்டு சால்வை போட்டு பாராட்டி வருகிறார்கள். இன்று இரவு ஸ்டாலின் சென்னை திரும்பியதும்
சந்திக்க இருக்கிறார். விரைவில் அமைச்சராகப் போகிறார்.
இந்த வரவேற்பு மூத்த அமைச்சர்களான துரைமுருகன், நேரு, ஐ.பெரியசாமி
போன்றவர்களுக்குப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. குறிப்பாக தேர்தல் விவகாரங்கள்,
கூட்டணி விஷயங்களில் அமைச்சர் நேருக்கு இருக்கும் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்பதால்
அவரது ஆதரவாளர்களை, செந்தில் பாலாஜியை சந்திக்கப் போகவேண்டாம் என்று கூறிவருகிறாராம்.
இனி, ஸ்டாலின், உதயநிதிக்கு
அடுத்த தலைவர் செந்தில் பாலாஜி என்பது உறுதியாகியிருக்கிறது.