News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

சென்னை அம்பத்தூர் அருகே ஏ.சி.யில் இருந்து வந்த கரும்புகையால் மூச்சுத்திணறி தாய், மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை அம்பத்தூர் அருகே அமைந்துள்ளது ஏகாம்பரம் நகர். இங்கு வசித்து வந்த அகிலா மற்றும் அவரது மகள் நஸ்ரிபேகம் இருவரும் வீட்டில் வழக்கம் போல் ஏசி அறையில் இரவு நேரத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு அதில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது.

 

இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டதில் அகிலாவும் நஸ்ரிபேகமும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற அம்பத்தூர் போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியி சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link