Share via:

பா.ஜ.க. கூட்டணி அறிவிப்புக்குப் பிறகு இன்று அ.தி.மு.க. செயற்குழுக்
கூட்டம் நடைபெறுகிறது. எம்.ஜி.ஆர். மாளிகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும்
செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானங்களைத் தாண்டி பரபரப்பான அறிவிப்பு ஒன்று வெளியாகும்
என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் செங்கோட்டையன் பிரச்னை செய்வார் என்று
எதிர்பார்க்கப்படும் நிலையில், நேற்று டோட்டல் சரண்டர் ஆகியிருக்கிறார்.
செங்கோட்டையன் இன்றைய செயற்குழு கூட்டத்தில் ஏதேனும் பிரச்னை செய்வார்
என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நேற்று ஈரோடு மாவட்டம், ஹாசனூரில் நடைபெற்றா மே
தினக் கூட்டத்தில் டோட்டலாக சரண்டர் ஆகிவிட்டதை அறிவிக்கும் வகையில் பேசினார். இந்த
கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன், “இப்போது, நாங்கள் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி
வைத்துள்ளோம். புரட்சித் தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் புரட்சித் தலைவி ஜெ.ஜெயலலிதா
ஆகியோரின் ஆசியால் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறப் போகிறோம்.
இந்த இயக்கத்தில் இருப்பவர்கள் அதிகாரத்தில் இருக்க வேண்டும்.
அப்போதுதான் ஏழைகளின் கஷ்டத்தை போக்க முடியும். அதிமுக ஆட்சிக்கு வரும்போது நெசவாளர்கள்,
தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நலன்கள் பாதுகாக்கப்படும். 2026 தேர்தலில் தேசிய
ஜனநாயக கூட்டணி 200-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும்’’ என்றும் கூறினார்.
செங்கோட்டையன் பிரச்னை செய்தால் கட்சியில் இருந்து நீக்கிவிடுவேன்
என்று எடப்பாடி பழனிசாமியின் எச்சரிக்கையினாலே இப்படி மாறியிருக்கிறார் என்கிறார்கள்.
அதோடு, இன்றைய கூட்டத்தில் மே மாதம் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள இருக்கும் ஒரு முக்கிய
அரசியல் நகர்வு பற்றிய அறிவிப்பும் வெளியிடப்படும் என்று தெரிகிறது.
அதோடு, ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு உத்தரவிட்ட மோடிக்கு பாராட்டு
தீர்மானம் நிறைவேறுகிறது. மேலும், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து
தமிழகத்திற்கான 100 நாள் வேலை திட்ட நிலுவைத் தொகையை விடுவிக்க அதிமுக பொதுச் செயலாளர்
எடப்பாடி பழனிசாமி வலியுறுத்திய நிலையில் ரூ.2,999 கோடி ரூபாயை விடுவித்த மத்திய அரசை
பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் தெரிகிறது.