Share via:
எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் எழுச்சிப்பயணத்தில் மூத்த தலைவர்
செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. அவரது தொகுதியை இபிஎஸ் புறக்கணிப்பதாக செய்திகள் வெளியாகின.
நீண்ட காலமாகவே முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவருமான கே.ஏ.
செங்கோட்டையனுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதனால் செங்கோட்டையனுக்கு,
கட்சியில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் படிப்படியாக குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று கோபி அருகே வெள்ளாங்கோவிலில் நடைபெற்ற திருமணம்
ஒன்றில் கலந்து கொண்ட செங்கோட்டையன் கட்சி நிர்வாகிகளிடம், 5ம் தேதி கோபியில் உள்ள
கட்சி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது
என கூறியிருக்கிறார்.
இதையடுத்து செங்கோட்டையன் என்ன பேசுவார் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
கட்சியில் மீண்டும் ஓபிஎஸ், சசிகலா இணைப்பு வலியுறுத்த வாய்ப்பு உண்டு என்று கூறப்படுகிறது. இதனை இபிஎஸ் ஏற்கவில்லை என்றால் மீண்டும்
உரசலைத் தொடங்கி கட்சிக்குள் மோதல் அதிகரிக்கும் என்றே தெரிகிறது.