Share via:
ரங்கராஜ் பாண்டேவின் சாணக்கியா ஆண்டு விழாவில் கலந்துகொண்ட முன்னாள்
அமைச்சர் செங்கோட்டையன், பிரதமர் மோடியை வானளவுக்குப் புகழ்ந்திருக்கிறார். அதோடு நான்
தெளிவான பாதையில் சென்றுகொண்டிருக்கிறேன். வேடிக்கை மனிதரைப் போல் வீழ்ந்துவிட மாட்டேன்
என்று எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
இதையடுத்து செங்கோட்டையனை உடனடியாக கட்சியிலிருந்து நீக்க வேண்டும்
என்று எடப்பாடி பழனிசாமிக்கு பலரும் கோரிக்கை வைக்கிறார்கள். இது குறித்து பேசும் அ.தி.மு.க.வினர்,
‘’செங்கோட்டையனுக்கு பாஜகவுக்கு போகும் திட்டம் இருந்தால் போக சொல்லுங்க. பொதுவெளியில்
பேட்டி கொடுத்து கொண்டு நாக்கை தொங்க போட்டு காத்திருக்கும் மீடியாக்களுக்கு தினமும்
தீனி போடும் வேலையை நிறுத்த சொல்லுங்க. ஊமை ஊரை கெடுக்கும், கோட்டான் குடியை கெடுக்கும்
என்பது போல, பொது வெளியில் பேட்டி கொடுத்து கொண்டு, கட்சியை டேமேஜ் செய்து கொண்டு இருக்கிறார்.
வெண்ணெய் திரண்டு வரும் போது தாளியை உடைத்த கதையாக போகிறது செங்கோட்டையன்
கதை. அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்றால் பாஜகவின் அந்த நான்கு பேரும் திரும்ப எம்.எல்.ஏ.
ஆக முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதிமுக பாஜக கூட்டணி இல்லை என்றால் வானதி,
நயினாரே அதிமுகவில் சேர்ந்தால் ஆச்சரிய பட ஒன்றும் இல்லை. நீங்க அங்க போய் என்ன செய்ய
போகிறீர்கள்? விலாசம் இல்லாமல் செய்துவிடும் பாஜக. இதெல்லாம் தெரியாமல் கட்சிக்குள்
இருந்து குழப்பத்தை உருவாக்கும் செங்கோட்டையனை வெளியே அனுப்புங்கள்’’ என்று கோரிக்கை
வைக்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி இது குறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
சட்டமன்றத்தில் செங்கோட்டையன் சபாநாயகரை சந்தித்து வேறு ஏதேனும் பிரச்னையை எழுப்புவதற்கு
முன்பு வெளியேற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள். நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது விரைவில்
தெரிந்துவிடும.