Share via:
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஓட்டல் உரிமையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு குறைவுக்கு ஏற்ற வகையில் மாதந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றி அமைத்து வருகிறது. அந்த வகையில் இன்று டிசம்பர் மாதம் முதல் தேதி என்பதால் விலைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் ரூ.918க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டரின் விலை மட்டும் அதிகரித்துள்ளது. சென்னையில் ரூ.1942க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை தற்போது 26.50 ரூபாய் உயர்ந்து ரூ.1968.50க்கு விற்கப்படுகிறது. இதன் விலை டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் சற்று ஏற்ற இறக்கத்துடம் விற்பனை செய்யப்படும்.
கடந்த மாத தொடக்க நாளான நவம்பர் 1ம் தேதி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ரூ.101.50 உயர்த்தப்பட்டு ரூ.1999.50 என்று விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர் நவம்பர் 16ம் தேதி 57 ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.1942க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஓட்டல் உரிமையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இதனால் ஓட்டலில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலை கடந்த மாதத்தை விட மேலும் உயரும் என்ற அச்சமும் பொது மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.