Share via:
அண்ணாமலை மீது வழக்கு போட ஆளுநர் அனுமதி எதுக்கு..?
எந்த அரசு பதவியிலும் இல்லாத அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்வதற்கு
ஆளுநர் அனுமதி எதற்கு வழங்க வேண்டும் என்பது பொதுமக்களிடம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
உண்மையில், இது ஆளுநர் அனுமதி அல்ல, தமிழக அரசு அனுமதி கொடுத்திருக்கிறது என்பதே உண்மை.
கடந்த ஆண்டு தமிழக முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான அண்ணாதுரை
குறித்து அண்ணாமலை, ’1956-ம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்
அம்மனை பற்றி அண்ணா சில கருத்துகளை தெரிவித்ததாகவும், அதற்கு அடுத்து பேசிய முத்துராமலிங்க
தேவர், அம்மனை பற்றி கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் பேசினால், அவர்களின் ரத்தத்தால்
அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும் என்று அறிக்கை விட்டார். அதன் பிறகு முத்துராமலிங்க
தேவரிடம் அண்ணா மன்னிப்பு கேட்டுவிட்டு சென்னை ஓடிவந்தார்’ என்று அண்ணாமலை பேசினார்.
அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,
தான் பேசியதற்கு அந்தக் காலக்கட்டத்தில் வெளியான செய்தித்தாள்களில் ஆதாரம் இருப்பதாக
அவர் தெரிவித்திருந்தார். ஆனால், அப்படி எந்த ஆதாரத்தையும் அவர் காட்டவில்லை.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக அண்ணாமலை மீது பியூஷ் மனுஷ்
சேலம் 4-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த
நீதிமன்றம், “அண்ணாமலை மீது இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலான
சட்டப்பிரிவுகள் கீழ் வழக்கு தொடரப்பட்டிருந்தால் இதற்கு அரசின் அனுமதியை பெற வேண்டும்
என உத்தரவிட்டிருந்தார்
அதன்படி, பியூஷ் மனுஷ் அளித்த புகாரில் முகாந்திரம் இருப்பதாக
முடிவு செய்த தமிழக அரசு, அதனை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. இதனை பரிசீலித்த
ஆளுநர் ரவியும், அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்ய ஒப்புதல் அளித்தார். இதையடுத்து,
அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு இன்று ஓர் ஆணையை வெளியிட்டது. இதன் நகல் சேலம்
நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு அடுத்த சில தினங்களில் விசாரணைக்கு
வரும் போது, அண்ணாமலையை ஆஜராக கோரி அவருக்கு சம்மன் அனுப்பப்படும் எனக் கூறப்படுகிறது.
எனவே, இந்த வழக்கில் கவர்னர் எந்த ஒப்புதலும் தரவில்லை. அண்ணாமலை
மீது விசாரணை மேற்கொள்ள அனுமதி கொடுத்தது தமிழ்நாடு அரசுதான். தமிழ்நாடு அரசின் அல்லது
மாநில அரசின் அறிவிப்புகள் கவர்னர் பெயரில்தான் வெளியிடப்படும். இது வெறும் நடைமுறை.
கவர்னருக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை.
அண்ணாமலை மீது IPC 153A, & B உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு
தொடர அதாவது இரு குழுக்கள், இரு சமூகம் இடையே
கலவரத்தை, பிளவை, விரோதத்தை தூண்டும் வகையில் பேசினால் வழக்கு போடும் பிரிவு (
HATE SPEECH) என்பதாலே இந்த அனுமதி அவசியமாகிறது.
இந்த விவகாரத்தில் அண்ணாமலை, ‘தி.மு.க.வினர் எத்தனை பொய் வழக்குகள்
வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளட்டும், கவலையில்லை’ என்று கூறியிருக்கிறார்.
மீண்டும் பிரசாந்த் கிஷோருடன் ஸ்டாலின் ஒப்பந்தம். எத்தனை கோடி
தெரியுமா?
பத்து வருடம் ஆட்சியில் இல்லாத தி.மு.க.வுக்கு கடந்த 2021 வாழ்வா
சாவா போராட்டமாக இருந்தது. ஆகவே, 360 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து தி.மு.க., வியூக
வகுப்பாளராக பிரஷாந்த் கிஷோர் நியமனம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, 2021 சட்டசபை தேர்தலில், வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட
அனைத்து விஷயங்களையும் ஐபேக் நிறுவனம் முன்னின்று செய்ய, தி.மு.க., மட்டும், 135 இடங்களில்
வெற்றி பெற்று, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. கூட்டணி கட்சியினரும் பெரும்பாலான
இடங்களில் வெற்றி பெற்றனர். ஒரு நாளைக்கு, 1 கோடி என, சன்மானம் பெற்ற ஐபேக் நிறுவனம்,
தேர்தல் வெற்றிக்குப் பின் கிளம்பியது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அவரது ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது.
அதன் பிறகு ஸ்டாலின் மருமகன் சபரீசனின் சகோதரி நிறுவனமான, ‘பென்’ வியூக வகுப்பு பணிகளில்
ஈடுபட்டு வந்தது.
இந்த நிலையில் வரும் 2026 சட்டசபை தேர்தலுக்காக, மீண்டும் பிரஷாந்த்
கிஷோரை நியமிக்க தி.மு.க. முடிவெடுத்துள்ளது. இதற்காக, டில்லியில் இருந்து சென்னைக்கு
வந்த பிரஷாந்த் கிஷோர், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவருடைய மருமகன் சபரீசனை சந்தித்து
பேசி, ஒப்பந்தம் கையெழுத்தானதாக சொல்லப்படுகிறது.
அடுத்த சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரு ஆண்டுகளே இருக்கும் நிலையில்,
கட்டாய வெற்றிக்கு பிரஷாந்த் கிஷோரின் வியூக வகுப்பு தி.மு.க.,வுக்கு தேவைப்படுகிறது.
அதற்காக, மீண்டும் பிரஷாந்த் கிஷோர் அழைக்கப்பட்டிருக்கிறார். இந்த முறையும் தினமும்
1 கோடி ரூபாய் என்ற அடிப்படையில் 500 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
அதாவது 500 நாட்கள் பணியாற்றப் போகிறார்களாம்.
இன்னமும் அதிகாரபூர்வமாக தி.மு.க.வில் இருந்து அல்லது பிரசாந்த்
கிஷோரிடமிருந்து வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, அறிவாலய வட்டாரங்கள்
கூறியதாவது: கடந்த, 2014 லோக்சபா தேர்தலுக்குப் பின், தி.மு.க.,வும் மற்ற கட்சிகளைப்
போல வியூகம் வகுத்து, தேர்தலை சந்திக்கும் முனைப்பில் களம் இறங்கியது. அதையடுத்து,
பிரஷாந்த் கிஷோர் டீமில் பணியாற்றிய ஹைதராபாதைச் சேர்ந்த சுனில் கனுக்கோலு என்பவரை
நியமித்தது. அதன்பின், 2016 சட்டசபை தேர்தலின் போதும், தி.மு.க.,வுக்காக வியூகம் வகுத்துக்
கொடுத்தவர் சுனில் கனுக்கோலு தான். அவருடைய வியூகம் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும்,
பெரும் தோல்வி என்று சொல்ல முடியாத நிலையில் இருந்தது. கிஷோர் மீது, தி.மு.க.,வுக்கு
ஈர்ப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், வன்னியர்களுக்கு
10 சதவீத இடஒதுக்கீடு கொடுப்போம் என்ற அறிவிப்பு வெளியிடும் வியூகத்தை, தி.மு.க.,வுக்கு
சுனில் வகுத்துக் கொடுத்தார். அது, பெரும் தோல்வியில் முடிந்தது. இதனால், 2021 தேர்தலுக்கு
சுனிலை கழற்றி விட்டு, பிரஷாந்த் கிஷோரை நியமித்துக் கொள்ளும் முடிவுக்கு தி.மு.க.,
வந்தது. பிரஷாந்த் கிஷோரிடம்,ஸ்டாலின் மருமகன் சபரீசன் பேசி, அதற்கான ஒப்பந்தம் போட
வைத்தார்.
செல்வராஜ் எம்.பி. மரணத்துக்கு செவ்வணக்கம்… யார் இந்த செல்வராஜ்?
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும்,
நாகபட்டினம் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர். எம்.செல்வராசு, எம்.பி., (67) இன்று
(13.05.2024) அதிகாலை 02.40 மணிக்கு சென்னை மருத்துவ மனையில் காலமான சம்பவம் அவரது
கட்சியினரிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவரது உடல்நலம் காரணமாகவே இந்த தேர்தலில் இவருக்குப் பதிலாக வி.செல்வராஜ்
என்பவர் தேர்தல் களத்தில் இறக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1957 மார்ச்
16 ஆம் தேதி பிறந்தவர். நீடாமங்கலத்தில் இவரது பெற்றோர்கள் முனியன் – குஞ்சம்மாள் கம்யூனிஸ்ட்
இயக்கத்தில் இணைந்து செயல்பட்டு வந்த நிலையில் தோழர் எம். செல்வராசு சிறுவயதிலேயே கம்யூனிஸ்டு
இயக்கத்தில் சேர்ந்து செயல்படத் தொடங்கினார்.
பள்ளிக் கல்வியை முடித்து திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில்
இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். மாணவர் பெருமன்றம், இளைஞர் பெருமன்றம் போன்ற அமைப்புகளில்
தீவிரமாக செயல்பட்ட தோழர் எம்.செல்வராசு அதன் மாவட்ட, மாநிலப் பொறுப்புகளை ஏற்று சிறப்பாக
பணியாற்றியுள்ளார். இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் நீடாமங்கலம் இடைநிலைக்குழு உறுப்பினர்,
துணைச் செயலாளர், செயலாளர் என்று படிப்படியாக உயர்ந்து ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்ட
நிர்வாகக் குழு உறுப்பினர், மாநிலக் குழு உறுப்பினர், தேசியக் குழு உறுப்பினர் என பல்வேறு
உயர் பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக பணியாற்றியவர்.
1989 ஆம் ஆண்டு நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் பேட்டியிட்டு
வெற்றி பெற்று முதன் முறையாக மக்களவைக்கு சென்றவர். தொடர்ந்து 1996, 1998, 2019 ஆகிய
ஆண்டுகளில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
நாடாளுமன்றத்தில் தொகுதி மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து போராடியவர்.
1989 ஜூன் 12 காவிரி நதிநீர் பிரச்சினை மீது நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்து தஞ்சாவூர்
ராஜராஜ சோழன் சிலை முதல் வேதாரண்யம் ராஜாஜி பூங்கா வரை 110 கிலோ மீட்டர் தூரம் மனித
சங்கிலிப் போராட்டம் நடத்தியதில் முன்னணி பங்கு வகித்தவர். ஓஎன்ஜிசி தொழிலாளர்கள்,
அமைப்புசாராத் தொழிலாளர்களை அணி திரட்டி தொழிற்சங்கம் அமைத்து தந்தவர், தமிழ்நாடு ஏஐடியூசி
துணைத் தலைவர் பொறுப்பில் செயல்பட்டு வருபவர். தோழர் எம்.செல்வராசு சிறுநீரகப் பாதிப்பு
காரணமாக மாற்று சிறுநீரகம் பொருத்திக் கொள்ளும் சிகிச்சை பெற்றவர். இவரது சகோதரி சாரதாமணி
சிறுநீரகம் அளித்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.
செல்வராசு – கமலவதனம் தம்பதியருக்கு செல்வப்பிரியா, தர்ஷினி என
இரு மகள்கள் உள்ளனர். இதில் செல்வப் பிரியாவுக்கு கடந்த ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருமணம் நடைபெற்றது.
அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய
தோழர் எம்.செல்வராசு, எம்.பி., உடல் நலம் பாதிப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவ
மனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். நாளை
(14.05.2024) செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் சித்தமல்லி கிராமத்தில் அன்னாரது இறுதி
நிகழ்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.